ஜேன் அயர்
ஒருதடவை
கொடுக்கத்தானே
தரப்பட்டிருக்கிறது?
(193
பள்ளிக்குக் கட்டளை
டெம்பிள்: ஆம், ஆனால், அந்தப் பெண்கள் சில நல்ல நண்பர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்காக அவர்களுக்கு வெள்ளாடை அளித்தோம்.
பிராக்கிள் ஹர்ஸ்ட் : நல்ல நண்பர்களை இந்தப் பள்ளிப் பெண்கள் பார்க்கப் போகவே கூடாது. நாளை இவர்கள் எந்தத் தரத்தில் வாழப் போகிறார்களோ, அந்தத் தரத்துக்கு மேற்பட்டவர்களுடன் பழகுவது அவர்களுக்கு நல்லதன்று.
செல்வி டெம்பிள் முகம் சிறிது கறுத்தது. ஆனால், அவள் ஒன்றும் கூறவில்லை.
பிராக்கிள் ஹர்ஸ்ட்: அதுமட்டுமன்று; சில நாட்களுக்கு முன் காலையில் மிகைப்பாடாக அப்பமும், வெண்ணெயும் செலவு செய்யப்பட்டிருக்கிறதே! அது என்ன காரணத்துக்காக?
டெம்பிள்: அன்று காலை உணவு முழுதும் கருகிப் போய்விட்டது. பெண்கள் யாரும் சாப்பிடவில்லை; பசியோடிருந்தனர். அதனால் மிகைப்பாடாக செலவு செய்ய வேண்டியதாயிற்று.
பிராக்கிள் ஹர்ஸ்ட்: இந்த மாதிரி இளக்காரத்தால் இந்த நிலையத்தின் நன்னோக்கங்கள் நிறைவேறாமல் கெட்டுப் போய்விடும் என்று அஞ்சுகிறேன். உணவுக்கே வகையற்ற இந்தப் பெண்கள் கருகிய உணவை உண்டால் என்னவாம்? அல்லது ஒருவேளை பட்டினியாய்க் கிடந்தால்கூட என்ன கெட்டு விட்டது? நாளை பல ன் னல்களைத் தாங்கும் வலிமையும் உரமும் இந்தப் பெண்களுக்கு வரவேண்டு மென்பதற்காக இந்த மாதிரித் தறுவாய்களை உண்டுபண்ண வேண்டியிருக்க, நீங்கள் வந்த தறுவாய்க்களைக் கூடப் பயன்படுத்தாது விடுகிறீர்களே! போகட்டும்; இனிமேலாவது பிள்ளைகள் கருகிய உணவு உட்கொள்ள, பட்டினி கிடக்கப் பயிற்சி கொடுத்து வையுங்கள்.
உணர்ச்சியற்ற
தலையசைத்தாள்.
முகத்துடன் செல்வி டெம்பிள்