பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

அப்பாத்துரையம் 7

வந்துவிட்டது. என் கோரிக்கை நிறைவேறிற்று. இரண்டு வாரங்களுக்குள் என்னை எதிர்பார்ப்பதாகத் திருமதி ஃவேர்ஃவக்ஸ் எழுதியிருந்தாள்.

லோவுட்டில் என் தோழியர்களிடமிருந்தும் புதிய தலைவியிடமிருந்தும் நான் முன்னாள் மாலையிலேயே பிரியா விடைபெற்றுக் கொண்டேன். இரவில் பெட்டி படுக்கையைக் கட்டிவைத்து விட்டேன். காலை நான்கு மணிக்கு அஞ்சல் வண்டி ஏறிப் பகல் முழுதும் பயணம் செய்து இரவு எட்டு மணிக்கு மில் கோட்டில் இறங்கினேன்.

ஜார்ஜ் அருந்தகத்தில் நான் சிற்றுண்டி அருந்தினேன்.

தார்ன்ஃவீல்டு இல்லம் எவ்வளவு தொலைவிலிருக்கும் என்று எனக்குத் தெரியாது. அதை உசாவி ஒரு வண்டி வைத்துக் கொண்டு செல்ல எண்ணினேன். இந்நோக்கத்துடன் அங்குள்ள ஏவலாளனிடம் "தார்ன்ஃவீல்டு இல்லம் எவ்வளவு தொலை இருக்கும், உனக்குத் தெரியுமா?” என்றேன்.

அவன்

"தாங்கள் பெயர் அயரா?" என்று மறு கேள்வி கேட்டான்

“அம்; உனக்கு எப்படித் தெரியும்?"

“தங்களுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார்."

எனக்காக காத்துக் கொண்டிருந்தது தார்ன் ஃவீல்டு இல்லத்தின் வண்டியோட்டியே. அருந்தகத்தின் வாயிலிலே ஓர் அழகிய பெட்டி வண்டி நின்றிருந்தது. வண்டியோட்டி பெட்டி படுக்கையை எடுத்து வண்டியிலேற்றி என்னையும் ஏறும்படி வேண்டினான். வண்டி விரைந்து சென்றது.

வண்டியின் தோற்றத்திலிருந்தும், வண்டியோட்டியின் நடையுடையிலிருந்தும் வண்டிக்குரியவர்கள் நயநாகரிகக் குடும்பத்தினர் அல்லர் என்று கண்டேன். இஃது எனக்கு அமைதி அளித்தது. ஏனென்றால், 'நயநாகரிகம்' என்பது என் உள்ளத்தில் திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் குடும்பத்துடன் தொடர்புடைய தாயிருந்தது.

பயணம் சற்று நீண்ட பயணமாகவே எனக்குத் தோற்றிற்று. பாதைகள் கரடுமுரடாயிருந்தன. கருக்கிருட்டாயிருந்த போதிலும்