பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




டேவிட் லிவிங்ஸ்டன்

5

பழைய முயற்சியின்மையின் பயனுமே அன்றி வேறன்று என்ற அறிவர். அவர் அவ்விரண்டையும் முயற்சியால் வெல்லலாம் என்ற உணர்ந்து மேன்மேலும் முயல்வர். இங்ஙனம் பெரிய காரியங்களில் ஈடுபட்டுப் பெரு முயற்சியால் வெற்றி பெற்றவர்களைக் குறித்தே திருவள்ளுவர்,

“செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலாதார்'

என்று பகர்ந்தார்.

"99

பெரியோர் தாம் செய்யும் பெரு முயற்சிகள் சிலவற்றில் இறுதி வெற்றி காணாது போதலும் உண்டு. எனினும் உலகத்தார், பெருந்தன்மை மிக்க அத்தகையவர் தோல்வி களைச் சிறியோர்களின் சிறு வெற்றிகளைவிடப் பன்மடங்கு உயர்வு உடையதாகப் போற்றுவர்.

டேவிட் லிவிங்ஸ்டன்

இ ங்ஙனம் செயற்கரிய செயல்களில் ஈடுபட்டுப் புகழ் எய்திய ய உலகப் பெரியார் பலர். அவருள் டேவிட் லிவிங்ஸ்டன்' என்ற ஆங்கிலப் பெரியார் ஒருவர். இவர் இளமை யிலேயே செயற்கரிய பெருங்காரியங்களைச் செய்யவேண்டும் என்று மனத்தில் உறுதி கொண்டவர், தம் ஆற்றலையும் அறிவையும் பிறர் நம்மைக்காகவும் பிறர் இன்பத்துக்காகவும் ஈடுபடுத்தி உழைத்தவர். அதுமட்டுமன்று. இவர் நாடிய நன்மை தம் நாட்டையோ, தம் இனத்தையோ தம் போன்ற உயர்நிலையினரையோ பற்றியதன்று. நாடுகளில் தாழ்த்தப்பட்ட நாடாய், இனங்களில் சீரழிவுற்ற இனமாய், நாகரிக உலகில் மற்றவர்களுடன் ஒத்து முன்னேற முடியாமல் நின்றிருந்த ஆஃப்ரிக்க நாட்டு மக்கள் நலனுக்கே இவர் பாடுபட்டார். அதற்காகத் தம் வாழ்க்கை நலன் முழுமையையும் துறந்து உழைத்தார்.

அருஞ்செயல்

ஒருவர் தம் நலம் துறந்து தம் வகுப்பு நலன், தம் நாட்டு நலன்

ஆகியவற்றிற்காக

உழைப்பதே

உலகில்

பெருமை