பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




224

அப்பாத்துரையம் 7

கேட்டதே என் கவலையில் பாதியைப் போக்கிவிட்டது, இந்தத் தொல்லை பிடித்த வாழ்வில் இருப்பதைவிட, அன்பு உள்ளம் படைத்த உன்னுடன், ஏதேனும் ஒதுங்கிய தீவில், ஒரு நாட்டுப் புறத்தில் ஒரு மூலையில் இருந்தால் எவ்வளவு நலமாயி ருந்திருக்கும்,” என்றார்.

அவர் பேச்சினாலும் தோற்றத்தினாலும் செயலினாலும் என் வகையில் அவர் உணர்ச்சிகள் எவ்வாறிருந்தன என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனால், அதே சமயம் என் மனமும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்ததால், அவர் போக்கைத் தடுக்கவோ, ஏற்கவோ செய்யாமல் வாளா இருந்தேன். அத்துடன் அவரைப் பிடித்த கவலையை எப்படி அகற்றுவது என்பதைத் தவிர வேறு எந்த எண்ணத்துக்கும் என் உள்ளத்தில் இடமில்லாதிருந்தது. அமைதியான நேரமாயிருந்தால், இன் னொரு பெண்ணை மணக்க இருக்கும் ஒருவர் என்னிடம் இப்படி நடந்து கொள்ள விட்டிருக்கமாட்டேன்.

ன்

“தீவில் இருக்கும் கனவு இருக்கட்டும். இப்போது கனவு காணும் நேரமில்லை. நனவிலேயே விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். நான் எப்போதும் உங்களுக்கு உதவ ஒருக்கமாக இருப்பேன்." என்று கூறி நான் என் அறைக்குச் சென்றேன்.

நான் மீண்டும் அவரை அன்று காண நேரவில்லை. ஆனால் நள்ளிரவில் நன்கு ஒரு கூக்குரல் கேட்டு எழுந்தேன். எனக்கு நேரே இருந்த அறையிலிருந்து, "ஐயோ கொலை, கொலை! வாருங்கள் வாருங்கள்,” என்று ஒரு குரல் கேட்டது. அது திரு. ராச்செஸ்டர் குரலன்று. மேலும் அது ராச் செஸ்டரையே பெயர் கூறி உதவிக்கழைத்தது.

நான் பரப்பரப்புடன் ஆடையுடுத்தி வெளியே வந்தேன். நான் கேட்ட குரலை எத்தனையோ பேர் கேட்டிருக்க வேண்டும். பல கதவுகள் திறந்தன. மனிதர் அங்கும் இங்கும் ஓடினர்; கேள்விகள் எங்கும் பரந்தன. “என்ன அது?” -தீயா பற்றி விட்டது? - கொலை, யார் யாரை?” ஆனால், மறுமொழி கூறுவார் இல்லை. யாரோ ஒருவர் குரல், “ராச்செஸ்டர் எங்கே?” என்று கேட்டது. எதிர்ப்புறமிருந்து “இதோ” என்ற குரலுடன் திரு.ராச்செஸ்டர் எங்களை அணுகினார்.