பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228

அப்பாத்துரையம் 7

தடுக்குமளவு அவர் உள்ளம் என்னிட பற்றுக் கொண்டிருக்க முடியாது! ஆகவே, அவருடன் வீணாகப் பழகித் தன் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று என் அறிவு கூறிற்று. ஆனால், நெஞ்சோ தொலைவிலிருந்து அவரைக் காணும் இந்த வாய்ப்பையாவது உதறாதிருக்கத்தான் தூண்டிற்று.

தோட்டத்தில் அவர் அன்று ஏதேதோ சொன்னார்; அதில் பெரும்பகுதி அவர் முதிரா இளமைப் பருவத் தவறுகளைப் பற்றியது. வெளிநாட்டிலிருக்கும்போது அவர் செய்த தவறுகள் அவரை விடாமல் பற்றித் துன்புறுத்தின புதிதாக வாழத் தொடங்குவதற்கு இவை தடையாயிருந்தன. ஒன்று அவர் அந்த வாழ்வுக்கு அடிமைப்பட வேண்டும்; அல்லது துணிந்து அதை உதறித்தள்ளி நெஞ்சுக்குகந்த வாழ்வில் இறங்கிப் பழம் பிழைகளை மறக்கடிக்க வேண்டும். இதில் எது செய்வது என்பதுபற்றி அவர் என் அறிவுரையைக் கேட்டார்..

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் கூறவும் முடியவில்லை. அவர் மீண்டும் வற்புறுத்தி என் கருத்துரை கோரினார். நான், “ஐயா! என்னைவிட அனுபவமிக்க தாங்கள் அறியாதபோது, நான் என்ன கூறமுடியும்? ஆனால் எல்லாம் அறிந்த ஒருவர் இருக்கிறார்; அவரிடம் உங்கள் வாழ்வை ஒப்படையுங்கள். அவர் வழிகாட்டுவார்," என்று மேலே சுட்டிக் காட்டினேன்.

66

ஆம், ஆனால் அவர்தாம் உன்னை அனுப்பியிருக்க க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார். என் கைகளை அவர் பற்றி ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அழுத்தினார். ஏதோ, என்னவோ என்று பீதியில் நான் சட்டென எழுந்து சென்றேன். தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தபோது அவர் என்னையே நோக்கி நின்றார்.