பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

231

அவர் தாம் வாழ்வை விட்டு ஓடமுடியவில்லை என்கிறார்! நான் ஓடிவந்து விட்டேன். இதுதான் இரண்டினிடையிலும் உள்ள வேற்றுமை.

என் உள்ளம் இவ்வாறு ராச்செஸ்டர் வாழ்வையும், என் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கோட்டைகள் கட்டிற்று.

என் அத்தை உண்மையிலேயே சாவுடன் போராடிக் கொண்டுதான் இருந்தாள். அழைப்பு அனுப்பும் போதிருந்ததை விட நிலைமை மோசமாகி விட்டதால், அவள் என்னை அடையாளங் காணவே இல்லை. என்னை ஆதரித்துக் கல்வி புகட்டிய பணிமாது பெஸ்ஸிதான் என்னை வரவேற்றுப் பழைய நாட் கதைகள் கூறிப் பொழுது போக்கினாள். ஆனால், ஒன்றிரண்டு நாட்களில் திருமதி ரீடின் பார்வையில் சிறிது தெளிவு கண்டது. ஒருநாள் அவள் என்னை உற்று நோக்கினாள். "ஜேன் அயர்தானே!" என்றாள் மெதுவாக.

“ஆம். நீங்கள் அழைத்தபடி வந்திருக்கிறேன்,” என்றேன்.

அவள் நோயுற்ற கண்கள் மிரண்டு மிரண்டு சுற்று முற்றும் பார்த்தன. “அறையில் செவிலியோ வேறு யாருமோ இல்லையே!” என்றாள்.

இல்லை. நாம் இருவருமே இருக்கிறோம்." என்றேன்.

66

உன்னைக் கண்டு பேசுவதற்காகத்தான் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நான் உனக்கு இரண்டு தடவை எவரும் மன்னிக்கமுடியாத தீங்கு செய்து விட்டேன். இறக்கும் இத்தறுவாயில் மன்னிப்புப் பெற்றாலல்லாமல் என் ஆவி அமைதியுடன் பிரியாது. ஆகவேதான் அவசர அவசரமாக உனக்கு அழைப்பு விடுத்தேன். தீங்குகளைச் சொன்னால் நீ மன்னிப்பது அருமை. ஆனாலும் நான் சொன்னால்தான் என் மனம் ஆறும். முதல் தீங்கு உன்னை மனமார ஆதரிப்பதாக என் கணவனுக்கு நான் அளித்த உறுதியை நான் ஒரு சிறிதும் பின்பற்றாததே. இதுவே பெருங்கொடுமை என்று இப்போது எனக்குத் தெரிகிறது. ஆனால் இரண்டாவது செய்த தீங்கு அதை ஒரு மின்மினியாக்க வல்லது. அதை...அதை...அந்தோ; அதை என்னால் சொல்லக்கூட முடியவில்லை...ஆனால் அதோ என் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார். அஃது உன் பெரிய தந்தை