-
232
அப்பாத்துரையம் 7
என் அண்ணன் எழுதியது. அதை வாசித்துப் பார் எல்லாம் தெரியும்." என்றாள்.
அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. சிறிது சாய்ந்து படுத்தாள். நான் சென்று கடிதத்தைப் படித்தேன். அது
வருமாறு:
என் தம்பி மகள் ஜேன் அயர் இருக்குமிடமும் முகவரியும் அறிந்து எனக்குக் கூறும்படி வேண்டுகிறேன். அவளை நான் என்னிடம் அழைத்து மடீராவில் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு உடல் தளர்ந்து விட்டது. குழந்தையுமில்லை. ஆகவே நான் அவளுக்கு என் செல்வம் முழுவதையும் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்.
தங்கள் அன்புள்ள ஜேம்ஸ் அயர் கடிதத்தின் தேதியிலிருந்து அது மூன்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்டதாகத் தெரிந்தது.
"இதை இதற்குமுன் என்னிடம் ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டேன்.
“உன்னை நான் வேம்பாக வெறுத்ததனால் லோவுட்டுக்கு உன்னை அனுப்பினேன். அங்கிருந்து உயர்நிலைக்கு நீ சென்று வாழ நான் விரும்பவில்லை. அத்துடன், போகும்போது... நீ என்னை வெறுத்துப் பேசியதையும் என்னால் என்னால் மறக்க முடியவில்லை.”
“நான் செய்தது தவறு என்று இப்போது உணர்கிறேன். ஆனால் அன்று மனமாரத்தான் செய்தேன். இப்போது உன்னிடம் மன்னிப்புப் பெறுவது முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடிய வில்லை,” என்றாள் திருமதி ரீட்.
எ ன்னை அவள் வெறுத்தது மன்னிக்கமுடியாத தவறு என்பதை நான் உணர்வேன். உதவியற்ற நிலையில் அவள் என்னிடம் கொடுமை காட்டினாள். ஆனால் இன்று அவள் உதவியற்ற நிலையில்தான் இருக்கிறாள். அவளிடம் கடுமை காட்ட என்மனம் விரும்பவில்லை. ஆகவே, “உங்களை அன்று வெறுத்தேன். இன்று வெறுக்கக் காரணமில்லை. நீங்கள்