8
அப்பாத்துரையம் – 7
உ
ஆர்வமுடையவர்கள், தம்மை அண்டினவரை உயிர்தந்தும் ஆதரிக்கும் இயல்பு உடையவர்கள். அவர்கள் மிக உயர் வாகப் பேணிய அறம் வாய்மை அல்லது உண்மை தவறாமையேயாகும்.
முன்னோர் வீரம்
ஏறக்குறையஇருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தை யும் ஸ்காட்லாந்தையும் ஓர் அரசன் ஆட்சி செய்தான். ஆங்கில நாட்டு மக்கள் அவனை வெறுத்து நாட்டிலிருந்து துர விட்டனர். வேறு ஓர் அரச பரம்பரையையும் நிறுவினர். ஸ்காட்லாந்து மக்கள், சிறப்பாக அங்குள்ள மலைநாட்டு மக்கள், இப்புதிய பரம்பரையை ஏற்காது பழைய மரபில் வந்தவர்களையே ஆதரித்தனர்; அவர்களையே அரசராக்கக் கிளர்ச்சி செய்து போராடினர். இத்தகைய பெரும்போர்களில் 'கல்லோடன்' என்ற இடத்தில் நடைபெற்ற போரும் ஒன்றாகும். ஸ்காட்லாந்திலுள்ள மலைநாட்டு மொழியாகிய 'கெய்லிக்' மொழியில் நாட்டுப் பாணர் பலர் இப்போரைப் பற்றிப் பாடியுள்ளனர். டேவிட் லிவிங்ஸ்டனின் முப்பாட்டனார் ஒருவர் இப்போரில் ஈடுபட்டு உயிர் நீத்து 'நாட்டு வீரர்' எனப் புகழ் பெற்றார்.
உயரிய பண்பு
டேவிட் லிவிங்ஸ்டன் சிறுவராக இருந்த போது, தம் பாட்டனார் மூலமாகத் தம் முன்னோர்களைப் பற்றிய வீரக் கதைகள் பல கேட்டறிந்தார். அதனால் அப்பாட்டனாருக்கு முந்திய ஆறு தலைமுறைகள் வரையுள்ள முன்னோர் வரலாறு முழுவதும் லிவிங்ஸ்டனுக்குத் தெரியவந்தது. குடும்பத்தின் பரம்பரைப் பண்புகளுள், பாட்டனார் மிக பெருமையுடன் அடிக்கடி எடுத்துக்கூறிய செய்தி, 'அக்குடும்பத்தில் எவரும் வாய்மை தவறியது கிடையாது' என்பதேயாகும். டேவிட் லிவிங்ஸ்டனும் தம் வாழ்நாள் முழுவதும் இப்பண்பில் எத்தகைய குறையும் வராமல் காத்துவந்தார்.
பாட்டனார்
லிவிங்ஸ்டன் குடும்பத்தார் 1792 ஆம் ஆண்டிலிருந்தே கிளாஸ்கோ", நகரத்தில் வந்த குடியேறி இருந்தனர். அங்கு லிவிங்ஸ்டனுடைய பாட்டனார் ஒரு பஞ்சாலையில் வேலை