டேவிட் லிவிங்ஸ்டன்
9
பார்த்து வந்தார். அவருடைய வாய்மையைக் கண்ட ஆலை முதலாளிகளுக்கு அவர் மீது பற்றுதலும் நம்பிக்கையும் மிகுந்தன. ஆயிரக்கணக்கான பெருந்தொகைகளை நிதிலையங்களிலிருந்து எடுக்கவோ, அங்கே கொண்டுபோய்க் கொடுக்கவோ நேர்ந்தபோதெல்லாம் அவர்கள் அவர் மூலமாகவே அத்தொகை களை நம்பிக்கையாகக் கொடுத்தனுப்பினார்கள்.
பெற்றோர்
பாட்டனாருக்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர். டேவிடின் தந்தையாகிய நீல் லிவிங்ஸ்டனைத் 5 தவிர மற்றவர் எல்லோரும் அரசாங்க அலுவல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர் ஒருவர் மட்டும் தேயிலை வாணிகம் செய்து வந்தனர். அவர் மிகுந்த சமயப் பற்று உடையவர்; ஞாயிற்றக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று வழிபடுவதுடன் அவ்வப்போது கோவில் மேடையேறிச் சிறு சொற்பொழிவுகளும் செய்துவந்தனர்.
6
டேவிட் லிவிங்ஸ்டனின் தாயார் ஆக்னிஸ் என்பவர். அவர் ‘ஹன்டர்’7 என்று குடிப்பெயருடைய குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் தந்தையர் இருவரும் கிளாஸ்கோ நகரிலேயே வீடு அமர்த்திக் கொண்டு வாழ்ந்திருந்தனர். அங்கே 1813ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாளில் டேவிட் லிவிங்ஸ்டன் பிறந்தார்.
ஆக்னிஸ் லிவிங்ஸ்டன் வீட்டைச் சுத்தமாகவும் வெளிச்சம் உடையதாகவும் வைத்துக்கொள்வதில் திறமை உடையவர். அங்கங்கே அடுக்குப் பலகைகளிலும் மேடைப் பலகைகளிலும் சட்டங்களிலும் நல்லறிவு தரக்கூடிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய சுற்றுச் சார்புகளிடையே பிறந்து வளர்ந்த டேவிட், கல்வியறிவில் இளமைமுதலே நாட்டங் கொண்டிருந்தமை இயற்கையே அன்றோ?
அடிக்குறிப்புகள்
1.
Scotland 2. The Hebrides, 3. The Isle of Viva 4. Glasgow, 5. Neli Livingstone, 6. agnes, 7. Hunter