பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

253 எங்கே போகிறது. எவ்வளவு தொலைவு போகிறது என்று நான் கேட்கவில்லை. எங்கே போனாலென்ன நான் போகவேண்டும் என்பதையும் கூறவில்லை. ஏனெனில் அது எனக்கே தெரியாது. என் கையில் அப்போது இருந்தது 12

எங்கே

வள்ளி. அதை வண்டிக்காரன் கையில் கொட்டினேன். அவன் பேந்தப் பேந்த விழித்து, 'என்னம்மா எங்கே போக வேண்டும்? ஏன் இவ்வளவு பணம்?” என்றான்.

66 உன் வண்டி எதுவரை போகிறதோ அதுவரை கொண்டுபோய் இறக்கி விட்டுவிடு. என்கையில் உள்ள பணம் அவ்வளவுதான். அது போதாதென்றால் அந்தப் பணத்துக்கு எதுவரை கொண்டு போகலாமோ அதுவரை கொண்டுபோய் இறக்கிவிட்டு விடு” என்றேன்.

வண்டிக்காரன் என்ன நினைத்தான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் வண்டியில் படுத்தவள் திரும்ப வண்டியில் கண்விழிக்கவில்லை. கண்விழித்தபோது சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வீட்டில் கட்டிலில் படுத்திருந்தேன். இரண்டு இளம் பெண்கள் என் அருகில் மாறி மாறி வந்து அமர்ந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் அக்காள் தங்கைகள். டயானா ரிவர்ஸ், மேரி ரிவர்ஸ் என்பது அவர்கள் கன்னிப்பெயர்கள் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன்.

மேரி ரிவர்ஸ் என்னருகில் வந்து, "அம்மா உடம்பை அலட்டிக் கொள்ளாதே நீ நல்ல நண்பர்களிடத்தில் தான் இருக்கிறாய். நாங்கள் இருவரும் எங்கள் அண்ணன் தூய திருஜானுடன் உன்னைக் கவனிப்போம்." என்றாள்.

வண்டிக்காரன் என் நிலைகண்டு, இரக்கமும் கவலையும் கொண்டு, என்னைத் தன் ஊருக்கே கொண்டுவந்து பிறர்க்கு உதவும் பெரும் பண்புடைய இந்தக் குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருந்தான் என்பதை நான் அவர்கள் கூற அறிந்தேன். ஊர் பேர் அறியாத என்னை எந்த எதிர்நலனும் நோக்காமல் ஆதரித்த அவர்களின் அருள் தகைமை என்னை இழுதாய் உருக்கிற்று. என் உடல், பொருள், ஆவி மூன்றையும் அப்பெருந் தகையார்களுக்கே ஈடுபடுத்தவும் நான் சித்தமாயிருந்தேன்.