பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

கொண்டு சென்றேன்.

263

தேநீர் கொடுக்கும்போது என் கை நடுங்கிற்று. நாய் வேறு என்னை அறிமுகப்படுத்தும் ஆத்திரத்தில் கொஞ்சிக் குலவிற்று அவர் ஒன்றும் புரியாமல், “யார்? மேரி?” என்றார்.

"மேரி சற்று வெளியே சென்றிருக்கிறாள். நான் ஒரு விருந்தாளி,' என்றேன். அவர் “ஆ, நான் கேட்பது கனவா, நனவா,” என்றார். அவர் கைகள் என் கைகளைத் தேட முன்வந்தன. நான் என் கைகளை நீட்டினேன். அவர் அவற்றைப் பற்றிதும் ‘ஆ, என் ஜேன்! இறுதியில் என்னை மறக்காமல் பார்க்கவாவது வந்தாயா?” என்றார்.

66

“பார்க்க மட்டும் வரவில்லை. தங்களுடைனேயே இருந்து காலங்கழிக்க வந்தேன்” என்றேன்.

66

66

'உண்மையாகவா?” என்று கேட்டார்.

"ஆம். நான் எல்லாம் நகரில் வந்து உசாவி அறிந்து கொண்டேன். நான் முன்பே என் தன்மதிப்பை எண்ணியது தவறு. உங்களைக் கடுந்துயரில் விட்டு விட்டுச் சென்றேன். நீங்கள் அடைந்த துன்பங்கள் உங்களுக்கே உரியன அல்ல. அவை எனக்கு வரவேண்டிய தண்டனைகள். மொத்தத்தில் இறைவன் உங்கள் உயிரையாவது பாதுகாத்து எனக்கு அளித்ததனால் நான் பிழைத்தேன்,” என்றேன்.

மகிழ்ச்சியில் அவர் தம்மை மறந்தார். என் நலங்கள் முற்றும் உசாவினார். ஆனால், நான் என் புதிய வாழ்வைமட்டும் கூறவில்லை. அவர் கண்ணற்ற நிலையில் நான் அவரை என் வாழ்க்கைத் துணையாகத் தேறவேண்டாமென்று அவர் தடுத்துப் பார்த்தார். “நான் உங்களை என்றோ தேர்ந்தாய் விட்டது. நீங்கள் கண்ணிழந்தது எனக்காகவும் பெண்ணினத் திற்குரிய உங்கள் கடமைக்காகவுமேயாதலால், என் உள்ளத்தில் உங்கள் இடம் உயர்வடைந்து விட்டதன்றிச் சற்றும் குறை வடைய வில்லை," என்று நான் கூறினேன். அதன்பின்னர் அவர் தமக்கு இப்போது வறுமையையும் ஏலமாட்டாமையும் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். நான் அப்போது என் புதுச்செல்வத்தின் செய்திகூறி, அவர் கவலைப்பட வேண்ட ா என்று ஆற்றினேன்.