12
அப்பாத்துரையம் - 7
ணெடுத்தும் பாரார். இதற்குக் காரணம் இல்லாமலில்லை. 'புனைக்கதைகள், இன்பம் மட்டும் தருமே அன்றி வாழ்க் கையைச் செம்மை செய்வதற்கான படிப்பினைகள் தர மாட்டா' என லிவிங்ஸ்டன் நினைத்தார். அதனால் இவர், புனை கதைகளைவிடப் பல நாடுகளிலும் சுற்றித் திரிந்தவரின் விரிவுரைகளை மிக்க ஆவலுடன் படித்தார். அறிவியல் நூல்களைப் படிப்பதிலும் இவருக்கு விருப்பம் மிக உண்டு. அந்நாளில் சமயத்தலைவர் பலர், 'அறிவியல், சமயத்தக்கு எதிரானது' எனக் கருதியிருந்தனர். இக்காரணத்தால் சமயப்பற்று மிக்க நீல் லிவிங்ஸ்டன், தன் மகன் அறிவியல் நூல்களைப் படிப்பதைக் கண்டித்து வந்தார். அதனால் தம் சமயப்பற்றுக்கு உறுதி ஏற்றப்பட்டதேயன்றிக் குறைவு ஏற்பட்டதில்லை என லிவிங்ஸ்டன் பிற்காலங்களில் கூறியது உண்டு.
ஆராய்ச்சி பொருள்கள்
டேவிட் லிவிங்ஸ்டனின் பிற்கால வாழ்க்கையில் தோன்ற இருந்த பெருமைக்கு உரிய அறிகுறிகள், இவருடைய இளமைப் பருவத்திலேயே ஓரளவு காணப்பட்டன. இவர், புத்தகங்கள் பலவற்றைத் தொகுக்கத் தொடங்கினார்; தமக்கு அருமை என்று தோன்றிய பொருள்களைச் சேர்க்கத்தொடங்கினார். அவற்றைப் பற்றிக் குறிப்புக்குளும் எழுதி வந்தார். இவ்வேலைகள், ஆராய்ச்சியாளர்க்கு மிகப் பயன்படத்தக்கன. இவரது இத்தகைய முயற்சி, சமயப் பணியையும், மருத்துவப் பணியையும் ஒருங்கே ஆற்றப் பேருதவியாக இருந்தது. இவரது இளமைக் காலத்து மக்கட்பணி ஆர்வமே, பிற்காலத்தில் தன்நலமற்ற உண்மைச் சமயப் பணியாக மாறிற்று. 'சமயப் பணி என்பது மக்கட் பணியே' என்பதை இவர் வாழ்வு நன்றாக எடுத்துக் காட்டும்.
பெயர் பொறித்தல்
லிவிங்ஸ்டன் இளமைப் பருவத்தில் காணப்படும் குறை பாடுகளை உற்று நோக்கினால், அவையும் இவர் உயர்வுக்கு உதவியனவே என்பது தோன்றும் சிறுபிள்ளைகள் ஊருக்கு அருகில் உள்ள 'பாத்வெல்'3 கோட்டையில் ஏறுவதில் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதுண்டு. லிவிங்ஸ்டன், மற்றப்