18
குருமானில் லிவிங்ஸ்டன்
ா
7
அப்பாத்துரையம் – 7
ஒரு திங்களுக்குப்பின் கப்பல் நன்னம்பின்கை முனையி லிருந்து புறப்பட்டது, புறப்பட்ட சில நாட்களுக்குள் அல்கோ விரிகுடா வந்து சேர்ந்தது. லிவிங்ஸ்டன் கப்பலினின் று றங்கி, மாட்டு வண்டியில் ஏறிச் சில நாட்களில் குருமான் என்ற இடம் வந்து சேர்ந்தார். இதுவே அறிஞர் மோபட், நடுநாள் சமயப்பணி ஆற்றிய இடமாகும். அவர், லிவிங்ஸ்டனிடம் தம் வாழ்க்கையின் படிப்பினைகளை எடத்துரைக்கையில், 'கடற்கரைப்பகுதிகளில் சமயப்பணியாளர் பலரிடையே இருந்து பணி ஆற்றுவதினும் உள் நாட்டில் பிறர் செல்லாத எல்லைவரை சென்று, புத்தம் புதிய மக்களிடையே பணி ஆற்றுவதே நல்லது' எனக் கூறியிருந்தார். அந்த அறிவுரையின் உண்மையை லிவிங்ஸ்டன் விரைவில் கண்டு கொண்டார்.
பொதுநலத் தொண்டு
லிவிங்ஸ்டனுக்கு முன் இவ்விடம் வந்து பணியாற்றி யவர் பலரும், சமய உட்பிரிவுகளை மேற்கொண்டவர். அவர் தமக்குள் மாறுபட்ட கருத்தினராய், ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தம் கொள்கைகளைப் பரப்பினர். மேலும் அவர்கள் சமயப் பணியுடனே வாணிக, அரசியல் நலங்களையும் கலந்து செயலாற்றினர். ஆதலால் அவர், கரையோரக் குடியேற்ற மக்களின் நன்மதிப்பைப்பெறாது,அன்னாரின் அவநம்பிக்கையையே பெற்றனர். இதனை லிவிங்ஸ்டன் நன்கு அறிந்தவர். ஆதலால் இவர், 'நாகரிக வகையில் குழந்தைப் பருவத்தினரான அவர் களிடையே உயர்ந்த முறையில் உறவாடிப் புதிய இடத்தில் புதிய நிலையை உண்டு பண்ணவேண்டும்' என்று எண்ணினார். லிவிங்ஸ்டன் 'தூய அன்பை அன்பினாலும், தன்நல மற்ற உழைப்பினாலும் மட்டுமே பெறமுடியும்' என்பதைத் தம் நீண்ட பணி வாழ்வில் காட்டலானார்' லிவிங்ஸ்டன் இக்கருத்துடன், குருமானை விட்டு உள்நாடு செல்லும் வகையில் தம்மைப் பயிற்றுவித்துக் கொள்ளத் தொடங்கினார்.