பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

துணைவர் இருவர்

அப்பாத்துரையம் – 7

1843 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் லிவிங்ஸ்டன் குருமானிலிருந்து புறப்பட்டு மபோட்ஸாவுக்குப் பயணம் தொடங்கினார். அப்போத இவருடன் வேறு வெள்ளையர் இருவர் அவ்விடத்தை நாடிச்சென்றனர். அவர், திரு பிரிங்கிள்' ஸர்தாமஸ்ஸ்டீல்" என்பவராவர். அவர் இருவரும் கேளிக்கைகளில் பேரும் புகழும் பெற்றவர்; நம் நாடாகிய இந்தியாவில் பலநாளிருந்து அதனை நன்கு அறிந்தவர். அவருள் ஸ்டீல், படைத்தலைவராக இருந்தவர்; பிற்காலத்தில் படை முதல்வர் ஆனவர். அவருடன் லிவிங்ஸ்டன் நெருங்கிய நட்பு உடையவரானார்.

எளிய வாழ்க்கை

லிவிங்ஸ்டன் ஆஃப்ரிகருடன் நெருங்கிப் பழகியதனால் இவர் பணிக்கு, இரண்டு தனிப்பட்ட நன்மைகள் ஏற்பட் டிருந்தன. அவருடைய மொழியை ஆஃப்ரிக நாட்டு மகன் ஒருவனைப் போலவே இவர் பேசப் பயின்றது ஒன்று, ஆஃப்ரிக நாட்டு நிலைக்கு ஒத்த அந்நாட்டு மக்களின் மக்களின் பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டமை மற்றொன்று. இவருடன் வந்த மற்ற ஆங்கிலேய நண்பர் எல்லாம் ஆரவாரமாகப் பல குதிரைகள், கூடாரங்கள், மூட்டை முடிச்சுக்கள், உணவுப் பொருட்குவைகள் முதலியவற்றை உடன் கொண்டு வந்தனர். இதனால் அவர்கள் பயணத்தில் அடைந்த தொல்லை பெரிதாகும். லிவிங்ஸ்டனோ எளிய ஆடையும், ஒரு கட்டை வண்டியும் உடையவராய், வேறு எவ்வகைச் சுமையும் இல்லாமல் கைவீசிச் சென்றார். ஆஃப்ரிக மக்களைப்போல் இவருக்கும் நிலப் பரப்பே படுக்கையாகவும் வானமண்டலமே கூரையாகவும் காற்றே போர்வையாகவும் பயன் பட்டன. 'மக்களுக்குப் பணி செய்வோர் இன்பவாழ்வு தேடுவது, தன் பணிக்குக் கால்கட்டு கைக்கட்டுகளைத் தேடிக்கொள்வதே ஆகும்' என்பதை லிவிங்ஸ்டன் உணர்வார். ஆதலின் இவர் எளிய வாழ்க்கையையே மேற்கொண்டார்.

பயணத்திடையே இராக்காலங்களில் அங்கங்கே தங்கி, மறுநாள் செல்வதே லிவிங்ஸ்டனின் வழக்கம். இவர் எங்கெங்குத் தங்குகின்றாரோ ஆங்காங்குள்ள மக்களின் உதவி