பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அரிமாவேட்டை

அப்பாத்துரையம் – 7

‘மபால்வே” என்பவர் ஓர் ஆஃப்ரிகப் பள்ளி ஆசிரியர். அவர் லிவிங்ஸ்டனுடன் இருந்தார். லிவிங்ஸ்டனும் அந்த ஆசிரியரும், வேட்டையிற் பயிற்சியுடைய மற்றும் சிலருடன் சேர்ந்து அங்கே தப்பி ஓட முயலும் சிங்கங்களைத் தாக்க வேண்டும் எனப் புறப்பட்டனர். அப்போது ஒரு பாறையின் மேல் உள்ள புதர் மறைவில் ஒரு பெரிய சிங்கம் மறைந்திருப்பதைக் கண்டனர். மபால்வே அதனைச் சுட்டார். ஆனால், துப்பாக்கிக் குண்டு பாறைமீது பட்டுத் தெறித்தது. சிங்கம் சீற்றத்துடன் குண்டுபட்ட இடத்தில் ஓங்கி அறைந்தது. பின், வளைத்து நின்ற வரிசையைப் பிளந்து கொண்டு ஓடிற்று. பகட்லாக்கள் வழக்கம்போல் வழிவிட்டனரே அன்றி, அதனைத் தடுக்கவோ தாக்கவோ முயலவில்லை. மீண்டும் ஒரு முறை இரண்டு இரண்டு சிங்கங்கள் வந்தன. ஆனால், பக்கத்தில் சூழ்ந்து நின்ற ஆட்கள் மீது பட்டுவிடுமே என்ற அச்சத்தினால் லிவிங்ஸ்டனும் நண்பரும் அவற்றைச் சுடவில்லை.

முடிவில் அனைவரும் ஊரை நோக்கித் திரும்பினர். அவ்வழியில் மற்றொரு மற்றொரு சிங்கம் பாறை அருகில் புதரில் பின்பக்கமாகத் தென்பட்டது.லிவிங்ஸ்டன் தம் கையிலிருந்து இரு தோட்டாக்களை நிரப்பிச் சுட்டார். "வேட்டுத்தவறவில்லை; விழுந்தது சிங்கம்” என்ற குரலுடன் அனைவரும் சிங்கத்தை அணுகினர். இதற்கிடையில் லிவிங்ஸ்டன் சுட்ட மூன்றாவது குண்டும் சிங்கத்தைத் துளைத்தது. ஆயினும், அதன் அருகில் அவர்கள் சென்றபோது மூன்று குண்டுகளை ஏற்றும் அது சாகாமல் வெகுளியுடன் நின்றது. அதன் தோற்றம், போர் அரங்கில் வெறியுடன் நிற்கும் மல்லன் தோற்றத்தை ஒத்திருந்தது. லிவிங்ஸ்டன் வெறுமையாய் விட்டதும் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிய வண்ணம், “சற்றுப் பொறுங்கள், சுடுகிறேன்” என்றார். அதற்குள் சிங்கம் வாலைச் சுழற்றிக் கொண்டு பெருமுழக்கத்துடன் லிவிங்ஸ்டன் மீது பாய்ந்தது. சிங்கத்தின் வலது முன்கால், லிவிங்ஸ்டன் தோள்மீது தன் முழுவன்மையுடன் ஓங்கி வீழ்ந்தது. சிங்கமும் லிவிங்ஸ்டனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டு உயிருக்குப் போராடினர். ஒரு முறை, சிங்கத்தின்அடி இவர் பிடரியில் வீழ்ந்து வரை உணர்விழக்கச் செய்தது.