பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மணம்

8. மண வாழ்க்கை

1844- ஆம் ஆண்டில் அறிஞர் மோபட் மறுபடியும் குருமானுக்கு வந்து தங்கினார். லிவிங்ஸ்டன் அவரையே ஞான குருவாகக் கொண்டிருந்தார். ஆதலால் இவர், தம் குருவின் குடிலுக்கு அடிக்கடி செல்வார். அச்சமயம் மோபட்டின் மூத்த புதல்வியரான மேரியை லிவிங்ஸ்டன் கண்டு பழக நேர்ந்தது. லிவிங்ஸ்டனின் வீரப்புகழ் மேரியின் மனத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை, அவ்வம்மையார், 'ஆங்கிலேயப் பெண்மணி எவருக்கும் அத்தகைய வீரவாழ்வில் பங்குகொள்வதைவிட உயர்ந்த பேறு வேறு இல்லை' என நினைத்தார். லிவிங்ஸ்டனும், அம்மையாரின் அடக்கம், குணம், அறிவுப் பயிற்சி ஆகியவற்றை நோக்கி, அவரிடம் மாறாப்பற்று கொண்டார். ஒருநாள் மாலை, மேரிதம் கையால் நீர் வார்த்துக் காத்த சிறு பூஞ்சோலையில்

ருவரும் உலவச் சென்றனர். அப்போது அவரவருடைய மனத்தில் தனித்தனி உலவிய எண்ணங்கள் அவர்களின் உரையாடல் மூலம் ஒன்றுபட்டுக் கலந்தன. அறிஞர் மோபட்டும் அவருடைய காதலை இனிது வரவேற்றதனால், அவர் விரைவில் மணவாழ்க்கை என்னும் தேரில் பூட்டப் பெற்றனர்.

நல்வாழ்வு

வாழ்க்கைத் துணைவர் இருவரும் மபோட்ஸாவில் ஓராண்டு தங்கினர். லிவிங்ஸ்டன் இதுவரை வெறுஞ் செங்கல் கொண்டு கட்டிய மனக்கோட்டைகள் திருவாட்டி லிவிங்ஸ்டனின் மூலம் சுண்ணாம்பும் காரையும் கலந்து கட்டிய