34
காட்டு மக்கள் துன்பநிலை
அப்பாத்துரையம் – 7
லிவிங்ஸ்டன் குடியேறியபின் அப்பகுதியில் கருப்பு தோன்றி நீண்டநாள் மழை பெய்யாதிருந்தது. 'இக்கருப்பு, மக்கள் பழைய நெறியை விட்டு லிவிங்ஸ்டன் வணக்க முறையை ஏற்றதனால்தான் ஏற்பட்டது' எனப் பெக்குவானர் எண்ணினர். மழையில்லாமல் நாடு வறண்ட காலங்களில் தலைவன் மழையைச் செய்வினை களால் வருவிப்பது அந்நாட்டு வழக்கம். ஸெச்சீலோ, புதிய சமயக்கட்டுப்பாட்டி னால் அதனைச் செய்ய முடியாத வரானார். மக்கள் அனைவரும் லிவிங்ஸ்டன் காலில் விழுந்து ஒரு முறையேனும் ஸெச்சீலைத் தம் நச்சுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துத் தமக்கு உயிர் தருவிக்கும்படி கண்ணீரும் கம்பலையுமாகக் கெஞ்சினர். என் செய்வார் லிவிங்ஸ்டன்! இவர் சமய உறுதிக்கு, இது போன்ற பரிதாபமான சோதனை என்றும் ஏற்பட்டதில்லை.
கல்வி அளித்தல் இவ்வளவு
நெருக்கடியிலும்
லிவிங்ஸ்டன்
மன
முடையாமல் தம் பணியைத் தளராது வளர்த்தே வந்தார். நாட்டு மக்கள் பலரை ஆசிரியராகப் பயிற்றுவித்தார். அவர்களைக் கொண்டே நாட்டு மக்களிடையே கல்வியைப் பரப்பினார். இதுவே, லிவிங்ஸ்டன் இவ்விடத்தில் ஆற்றிய தொண்டகளில் தலை சிறந்தது.
புதிய தொல்லை
ய
லிவிங்ஸ்டனுக்கு மற்றொரு துறையில் ஏற்பட்ட துயரம், இத்துயர்களை யெல்லாம் மறக்கச் செய்யததாக இருந்தது. டச்சுக்காரரான பூயர்கள், லிவிங்ஸ்டன் குடியேறிய பகுதிமுதல் கீழ்க் கடற்கரைவரை பரவி இருந்தனர். அவர் பொதுவாக ஆங்கிலேயருடைய முறைகளையும் லிவிங்ஸ்டனுடைய முறைகளையும் வெறுத்தனர். ஏனெனில் அவற்றால் நாட்டுமக்கள் அறிவும் ஒற்றுமையும் வன்மையும் பெற்று, வெள்ளையர்க்கு அடிமையாக வாழ்வதில் வெறுப்புறுவர் என்று அவர் எண்ணினர். லிவிங்ஸ்டன் பணி முதிர்ச்சி பெறுமுன் அவர் மன்னேறித் தாக்கிப் பெக்குவானரைச் சூறையாடத் துடித்து நின்றனர். லிவிங்ஸ்டன், பீயர் தலைவரான குருகரைக்? கண்