டேவிட் லிவிங்ஸ்டன்
43
நிலைகளையும் விண்மீன்களின் நிலைகளையும் கொண்டு நிலக் கிடக்கையை வரையறையிட்டு அளவைப் படம் வரையும் மறையையும் பயின்று கொண்டார்.
பூயர் அட்டூழியம்
லிவிங்ஸ்டன் குருமா குருமானுக்கு வந்தபோது உள்ளந் துடிக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் கேள்விப்பட நேர்ந்தது. லிவிங்ஸ்டன் பணியை வெறுத்த அடிமை வணிகராகிய பூயர்கள் இவர் அரும் பணி ஆற்றிய இடமாகிய பெக்குவான நாட்டைத் தாக்கிச் சூறை ெ காண்டனர்; ஸெச்சீலின் குழந்தைகள் சிலரையும், லிவிங்ஸ்டன் பள்ளிப் பிள்ளைகளையும், பிறமக்ளையும் அடிமைகளாகக் கொண்டனர், லிவிங்ஸ்டன் குடிசையையும் குடியிருப்பையும் அடியோடு அழித்து ஒழித்தனர். பெக்குவானர் செல்வமெல்லாம் அழிந்து பலர் உயிர் இழந்தனர். எஞ்சிய சிலருடன் ஸெச்சீல் லிவிங்ஸ்டனிடம் வந்து முறையிட்டார். உயிர்வதைக்கு ஆளான அக்காத்தும் அம்மக்கள் நம்பிக்கையும் உறுதியும் பற்றும் கெடாமல் லிவிங்ஸ்டன் பணியைத் தாமே நடத்த முன்வந்த ஒன்றே இவர் மனப் புண்ணுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.
நல்ல நோக்கம்
லிவிங்ஸ்டன் ஸெச்சீலைத் தம்முடன் அழைத்துச் சென்று அவருக்கும் அவரைச் சேர்ந்தவருக்கும் ஏற்பட்ட தீமையைப்பற்றி விக்டோரிய பேரரசிடம் முறையிட முயன் றார். ஆனால் பக்கத் துணையின்றி அது வீணாயிற்று. இனி வடக்கே செல்லும் முயற்சியில் பூயர் எதிர்ப்பு இருக்கும் என்பதை லிவிங்ஸ்டன் அறிந்தார். எப்பாடுபட்டாயினும் ஆஃப்ரிக உள்நாட்டுப் பகுதியை நாகரிக உலகுடன் இணைத்தாலன்றி அடிமை வாணிகத்தை நிறுத்த முடியாது என்பதை இவர் கண்டார். ஆதலால் லிவிங்ஸ்டன் வடக்கு நோக்கி மீண்டும் பயணமானார். இம்முறை இவர் செல்ல விரும்பிய இடம் ஸெபிட்டுவேனின் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டின் வடகோடியில் உள்ள ‘லின்யாண்டி’2 ஆகும்.