பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

பூயர்களுடன் உடன்படிக்கை

அப்பாத்துரையம் - 7

பூயர்களுக்கும் ஆஃப்ரிக மக்களுக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளாகப் பெரும்போர் நிகழ்ந்து வந்தது. இப்போரே ‘கா ஃபிரிப் போர்'3 எனப்படும். அப்போர் கீழ்க்கரைப் பக்கம் நடந்தது. ஆகவே அவ்வழி எளிதாயினும் அவர்கள் அதை விட்டகன்று கலஹாரிப் பாலைவனத்தின் வழியே மீட்டும் செல்லவேண்டியவராயினர். அப்படிச் சென்றும் பூயர்களுடன் பல கைகலப்புகள் நேர்ந்தன. போர் இறுதியில் பிரிட்டிஷார் அப்பகுதியில் பங்கு கொண்டதாலும் ‘பரோலாங்’4 வகுப்பினர் பெக்குவானர்களுடன் சேர்ந்ததனாலும் பூயர்கள் உடன்படிக்கை செய்து கொண்டனர். ஸெச்சீலின் பிள்ளைகளில் பூயர்களின் கொடுமைக்கு இரையாகாது எஞ்சிய சிலரும் பிற பெக்கு வானரும் தம் இனத்தவருடன் வந்து சேர்ந்தனர். 'இறந்தவர் பிறந்தனர்' என்ற அளவில் பெக்குவானர் இன்பக் கூத்தாடினர்.

புதிய இடத்தில் தொண்டுபுரிதல்

வழியில் பல சிற்றாறுகள் வெள்ளமெடுத்துப் பெருகிச் சேறாக இரந்ததனாலும், வழிகாட்ட உதவிய ஆட்கள் கலகம் விளைத்ததினாலும் பயணம் மிகத் தாமதித்தது. அவர்கள் 'சோப்'5 ஆற்றை அடைந்ததும் மகோலொலோ வகுப்பினர் இருந்த ம் சென்று சேர்ந்தனர். ஸெபிட்டுவேனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன், ஆட்சிப் பொறுப்பை விரும் பாது விலங்கியதனால் அவன் தம்பியாகிய ஸெக்கெலெட்டு" தலைவனானான். அவனும் லிவிங்ஸ்டனிடம் நட்புடையவ னாகவே இருந்து வந்தான். ஆனால், போர்ச்சுக்கீசிய அடிமை வாணிகர்கள் அவன் உடன்பிறந்தானாகிய இம்பெபி3 யை அவனுக்கு எதிராகத் தூண்டி ஆதரவு அளித்து வந்தார்கள். லிவிங்ஸ்டன் ஸெக்கெலெட்டை அடிமை வாணிகத்தை விட்டொழிக்கும்படி உறுதிமொழி கூறுவித்தார். மேலும் மற்ற வகுப்பினரையும் போர்ச்சுக்கீசியரையும் அடிமை வாணிகத்தைக் கைவிட்டு மகோலொலோக்களுடன் கால்நடை வாணிகம் புரியுமாறு தூண்டிவந்தார். இதன்மூலம் அவர்களுக்கு மேற்கில் இருந்த 'லெச்சுலாடெப்" முதலிய வகுப்பினருடன் நட்பும் வாணிகத் தொடர்பும் மிகுந்தன.