டேவிட் லிவிங்ஸ்டன்
45
லிவிங்ஸ்டன் லின்யான்டியில் சிலநாள் தங்கி, மருத்துவப் பணியும் சமயப் பணியும் ஆற்றிவந்தார். அங் குள்ளவர்களிற் பலர் ஏழு அல்லது எட்டு பெண்களை மணந்தவர்கள். லிவிங்ஸ்டனின் சமயத்தை மேற்கொண் டால், ஒரு மனைவியைத் தவிர மற்றவரை நீக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வேண்டும். அது, அவர்களை லிவிங்ஸ்டன் சமயத்தில் சேராவண்ணம் நெடுநாள் தடுத்து வைத்தது. ஆயினும் அவர்களுடைய பொதுவாழ்வை லிவிங்ஸ்டனால் பல வகைகளில் மேம்படுத்த முடிந்தது.
க்
காய்ச்சல் நோய் லின்பான்டியிலும் மிகுதியாக இருந்தது. எனவே லிவிங்ஸ்டனும் அடிக்கடி நோய்வாய்ப் பட்டார். இவருடன் குடியேறிய மொகோலொலோக்களும் வரவரக் குறையலாயினர். எனவே லிவிங்ஸ்டன் மேல் கடற்கரை சென்று வெளிநாட்டுத் தொடர்பை வளர்க்க வேண்டும் என்ற தம் பழைய திட்டத்தை விரைவில் தொடங்கினார். அதன்படி அவர் ஸெக்கெலெட்டு தந்த ஆட்களுடனும், கால்நடைகள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றுடனும் 1853 ஆம் ஆண்டு நவம்பர் 11 ல் 'லோவாண்டா'8 நோக்கிப் புறப்பட்டார்.
புதியவர் உதவி
09
லிவிங்ஸ்டன் செய்த பயணங்கள் அனைத்திலும் லோவாண்டாப் பயணமே மிகுந்த தால்லைகளை உடையது. இவர் எருது ஒன்றின் மீது ஊர்ந்து ஆற்றைக் கடக்க முற்பட்டார். அப்பொழுது அந்த எருது இவரை நட்டாற்றில் விட்டு அகன்றது. ஸெகெலெட்டுவின் செல்வாக்கு பரவிய எல்லையைக் கடந்தபின் லிவிங்ஸ்டனுடன் இவரைச் சேர்ந்தோரும் 'பாலோண்டாக்கள்' என்ற வகுப்பினரைக் கண்டனர். அவர்கள் தலைவன் 'ஷின்டே என்பவன் அவன் துணைத்தலைவியான ‘மானென்கோ’10 என்பவள் அவன் கீழிரந்து கிழக்கெல்லையை ஆண்டாள். அவள் ஆண்மையும் வீரமும் பிடிவாதமும் உடைய வீரப் பெண்மணி. அவள் லிவிங்ஸ்டன் கூட்டத்தார்க்கு உதவ முன்வந்தாள். ஆயினும் அவள் அவர்களை ஆற்றில் படகுமூலம் போகவிடாமல் தன் மனம் போல் கரை வழியாகப் போகச் செய்தாள். லிவிங்ஸ்டன் ஆட்கள் அவளுடன் ஒத்து நடக்க முடியாமல் அவலமுற்றனர்.