பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் – 7

ஷின்டே நடு ஆஃப்ரிகாவிலேயே மிக்க ஆரவாரமான அரச நிலையுடையவன். அவன் தன் கொலு மண்டபத்தில் லிவிங்ஸ்டன் அவனுக்கு ஓர் எருதைப் பரிசளித்தார், பின் மகோலொலோவுடன் வாணிகம் செய்யத் தூண்டியபின், அவன் தந்த வழிகாட்டிகளுடன் காதெமா13 என்ற மற்றொரு தலைவனை அடைந்து அங்கும் அவனால் ஆதரிக்கப்பெற்றார்.

பல இடையூறுகள்

இதன் பின், லிவிங்ஸ்டன் நோயாலும் கீழுள்ளோர் கலகங்களாலும் பல தொல்லைகள் அடைந்தார். பலமுறை தம்

ஆட்களையே துப்பாக்கியால் அச்சுறுத்தி அடக்க

வேண்டியவரானார். 'சீபோக் என்ற வகுப்பினரின் தலைவன் படைகளும் அவர்களை அழித்துப் பெருங் கொள்ளைபெற எண்ணினான். லிவிங்ஸ்டனும் இவர் ஆட் களும் காட்டிய ஆண்மையால் அவன் பணிந்துவிட்டான். எனினும் போகுமிடம் எங்கும் அவன் ஆட்கள் தொல்லை தந்துகொண்டே இருந்தனர், இறுதியில் லிவிங்ஸ்டனும் இவரைச் சேர்ந்தவர்களும் ஏப்ரல் மாதம் முதலாம்

13

நாள்

'ஹோவாங்ஹோ என்ற ஆற்றை அணுகினர். அவ் வாற்றைக் கடக்கப் போர்ச்சுகீஸிய ஊர்த் தலைவன் ஒருவனின் உதவி வேண்டினர். அவனும் இவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளைக் கைம்மாறாகப் பெற எண்ணி னான். ஆயினும் லிவிங்ஸ்டன் முதலியோர் தம் மிடமள்ள பொருள்களை இழக்க மனமின்றி அவன் ஆட்களைச் சட்டை செய்யாமல் எதிர்த்துப் போராடினர்; இறுதியில் ஸிப்ரியானோ 14 என்ற போர்ச்சுகீசிய படைத்தலைவன் உதவியால் ஆற்றைக் கடந்தனர். அவனே அவர்களுக்கு உணவும் நல்லிடமும் தந்ததுடன் மாகோலொலோக்களுக்கு விரைவில் ஊதியம் தரும் வாணிகமுறைகளைக் காட்டினான். அவன் உதவியாலேயே அவர்கள் எளிதில் எஞ்சிய தூரத்தையும் கடந்து லோவாண்டா சென்றார்கள்.

லோவாண்டாவில் லிவிங்ஸ்டன்

ஸெகெலேட்டுவின் பரிசுகளுள் இரண்டு யானைத் தந்தங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. லிவிங்ஸ்டன்