பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

விக்டோரியா நீர்வீழ்ச்சி

அப்பாத்துரையம் - 7

லின்யான்டியில் லிவிங்ஸ்டன் எட்டு வாரங்கள் தங்கினார். உள்நாட்டுப் பகுதியை மேல்கடற்கரையுடன் இணைத்தாய் விட்டது. இனிக் கிழக்குப் பக்கத்துடனும் இணைப்பு ஏற்படுத்தவேண்டும்' என எண்ணிய லிவிங்ஸ்டன், கிழக்கே கிலிமேன்9 நோக்கிப் புறப்பட்டார். அவர்களுடன் ஸெகெலெட்டு ஜாம்பெஸித் தலைநிலம் வரை வந்தான். லிவிங்ஸ்டனும் பிறரும் அவ்வாற்றின் வழியே சென்று அதில் உள்ள ஒரு பெரிய நீர்வீழ்ச்சியை அடைந்தனர். இப்பெரிய நீர்வீழ்ச்சியிலிருந்து நீர்த்திவலைகள் மிக உயர்ந்து தூண்கள் போல் மேலெழுந்து சென்றன. ஆகவே, அதனை அந்நாட்டு மக்கள் மோஸி- வா-துன்யா, அஃதாவது ‘இரைச்சலிடும் நீராவி’ என்று பெயரிட்டனர். லிவிங்ஸ்டன் தம் நாட்டை, அந்நாள் ஆண்ட விக்டோரியா பேரரசியின் பெயரை இட்டு, அதனை 'விக்டோரியா நீர்வீழ்ச்சி’21 என்ற அழைத்தனர். அஃது இன்றளவும் அப்பெயராலேயே வழங்குகிறது.

புதிய காட்சிகள்

அந்நீர்வீழ்ச்சியின் இருபுறங்களையும் அடர்ந்து உயர்ந்த மரங்கள் அழகுசெய்தன. தென் ஆஃப்ரிகாவில் லிவிங்ஸ்டன் கண்டகாட்சிகள் எல்லாம் பரந்த பாலைவனங்களும் புதர்களும் சதுப்பு நிலங்களும் மங்கலான தோற்றமுடைய குன்றுகளுமே ஆம். ஆனால் இதற்கு மாறாக, லிவிங்ஸ்டன் கண்முன் இயற்கை, பன்னிறத் தோசை விரித்தாடும் பச்சை மயில்போல் தன் முழு அழகுடன் தோற்றமளித்த முதலிடம் இதுவே. லிவிங்ஸ்டன் சிறு படகுகளில் சென்று நீர் வீழ்ச்சியை அடுத்து உள்ள தீவில்

ங்கினார். அதனுள் பாறையைத் துளைத்தோடும் கிளை நீர் ழ்ச்சிகளைக் கண்டு வியந்தார். பருத்த தூண்கள் உருவில் தண்ணீர் நிலத்தைக் கிழித்து பாதாளத்தில் செல்வது போன்ற அக்காட்சி அச்சந் தருவதாக இருந்தது.

கிழக்குப் பகுதி குடிகள்

மேற்றிசையில் வாழ்ந்த மக்களைப்போலவே கீழ்த் திசையிலும் பலவகை முரட்டு வகுப்பினர் தொல்லை தர ருந்தனர். லிவிங்ஸ்டன் சில சமயம் அச்சுறுத்தலாலும், சில