டேவிட் லிவிங்ஸ்டன்
49
சமயம் நயத்தாலும், சில சமயம் தம்மிடத்திலுள்ள அரிய நாகரிகப் பொருள்களான கடிகாரம், வெயில் கண்ணாடி முதலியவற்றால் வேடிக்கை காட்டுவதாலும் அவர்களைத் தம் வயப்படுத்திக் கொண்டார். போர்ச்சுகீஸியருடன் அண்மைவரைப் போரிட்ட மக்கள் சிலர், லிவிங்ஸ்டனைப் போர்ச்சுக்கீஸியரென நினைத்துப் பகைத்தனர். லிவிங்ஸ்டன் தம் தோலின் தூய வெண்மையைக் காட்டித் தாம் வேறு நாட்டினர் என்பதை உணர்த்தினார். அவர்கள் "ஆ! தூய வெண்ணிறம் கறுப்புடன் நட்புடையது; கலப்பு நிறமே எங்களைப் பகைப்பது” என்ற நட்புக்கொண்டார்கள்.
கூறி
லிவிங்ஸ்டன் போர்ச்சுகீஸிய எல்லை அடைந்ததும், மேலைப் போர்ச்சுக்கீஸியர் சிலரிடமிருந்து பெற்ற கடிதங்கள் அவருக்கு மேஜர் ஹிக்கார்டு22 என்பவர்; அவர் லிவிங்ஸ்டன் முதலியோருக்கு உணவு அனுப்பி வரவேற்றார். லிவிங்ஸ்டன் தம்முடன் வந்த மகோலெலோக்களை இங்கே உள்ள டெட்டி23 என்ற இடத்தில் தங்கச் செய்தனர், பிறகு கடல் வழியாக ஸென்னாவுக்கும்24 அங்கிருந்து மௌரிடிய ஸுக்கும்25 சென்றார். இவருடன் சென்ற ‘ஸெக்வேபு26 என்ற மகோலொலோ வகுப்பினன் வகுப்பினன் கடல், கப்பல் முதலிய கண்காணாக் காட்சியைக் கண்ட மட்டற்ற மகிழ்ச்சியால் நிலைதடுமாறிப் பித்தனாகி இருந்தான். மற்ற மகோலொ லோக்கள் விறகு வெட்டி தல் முதலிய தொழிலில் ஈடுபட்டு, டெட்டியிலேயே தங்கிப் பொருள் ஈட்டி இன்புடன் வாழ்ந்தனர்.
லிவிங்ஸ்டன் மௌரிடியஸில் ஒரு திங்கள் தங்கினார்.
ஆஃப்ரிகப் பயணத்தினிமையே நோய்ப்பட்டு உப்பியிருந்த தமது நுரையீரலை இவர் இவர் அறுவை அறுவை மருத்துவத்தால் குணப் டுத்திக்கொண்டார்.அதன்பின் 'பி' அண்ட் ‘ஓ' கழகத்திற்கு உரிய கண்டியா27 என்ற கப்பலில் தாய் நாடு செல்லப் புறப்
பட்டார்.
அடிக்குறிப்புகள்
1. Boers
2. Linyanti