பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

ம்

அப்பாத்துரையம் – 7

மறுமுறை செல்கையில் கண்ணீரும் துயரும் மிக்க நன்கடாய்’த் திகழ்ந்தன. ஆயினும் நாளடைவில் ஆங்கில ஆட்சியும் நாகரிகமும் புகுந்து அடிமை அறவே ஒழியும் வகையில் லிவிங்ஸ்டன் பணி, ஒரு வழிகாட்டியாகவே அமைந்தது.

⚫ 17

டெட்டியில் தங்கிய மகோலொலோக்களில் பலர், அம்மை நோயால் தொல்லைப்பட்டு இறந்தனர். அவர்களை மீட்டும் தம் நாட்டுக்குக்கொண்டு வருவதாக லிவிங்ஸ்டன் ஸெகெலெட்டுக்கு உறுதி கூறியிருந்தார். அதன்படி இவர் அவர்களை உடன் கொண்டு ஃஜாம்பெஸி ஆற்றில் மேல் நோக்கிச் சென்று 'ஷெஷெகெ என்னும் இடத்தில் ஸெகெலெட்டைக் கண்டனர். அவன் தொழுநோய்கண்டு தன் மக்களிடமிருந்து பிரிந்திருந்தான். அவன் லிவிங்ஸ்டனின் அறிவுரைகளை மறந்து, மக்களிடை வேற்றுமை காட்டினான்; தன் தந்தை அமைத்த பேரரசையும் அவன் சீர்குலையவிட்டிருந்தான். லிவிங்ஸ்டன் அவன் நோய்க்கு மருந்து தந்தும் மற்றிலும் குணம் ஏற்படவில்லை. ஆனால் லிவிங்ஸ்டனின் கூட்டுறவால் அவன் மனஅமைதி பெற்றான். மகொலொலோக்கள் இழந்த தாயை மீட்டும் பெற்ற சேய்கள் போல லிவிங்ஸ்டனை வரவேற்று மகிழ்ச்சி எய்தினார்கள்.

நற்பணியில் தோல்வி

அவர்கள் மறுபடியும் டெட்டிக்கு வந்தனர். அப் போதும் ஆங்கில நாட்டுப் பல்கலைக் கழகங்களின் சார்பில் ஓர் ஆங்கில சமயப் பணிக்குழாம் அங்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களைக்கண்ட லிவிங்ஸ்டன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். லிவிங்ஸ்டனும் இக்குழாத்தினரும் ஒப்பற்ற நல்லெண்ணத்துடன் ஒத்துழைத்து ஆஃப்ரிக மக்களை ஈடேற்றவும், ஒத்துழைத்து ஆஃப்ரிக மக்களை ஈடேற்றவும், அடிமையை ஒழிக்கவும் அரும்பாடுபட்டனர். ஆனால் இறைவன் திருவிளையாடல் 'இப்போது அவர்களுக்கு எதிராக இருந்தது. அவர்கள் நற்பணியின் தோல்வி, லிவிங்ஸ்டன் புகழை அந்நிலையில் பழிப்புயலுக்கு ஆளாக்கியது; இடையூறும் விளைவித்து விட்டது. ‘மங்கஞ்சா’2 என்ற ஒரு வகுப்பினர் லிவிங்ஸ்டனிடம் நட்புக் கொண்டனர்; 'மகோமெரோ'18 என்ற ஊரில் சமயப்பணி நிலையம் அமைக்க இடந்தந்தனர். இங்கிலாந்திலிருந்து வந்த