டேவிட் லிவிங்ஸ்டன்
19
55
சமயக் குழத்தின் தலைவர் இவ்விடத்திலிருந்து பணியாற்ற லானார், ஆனால் மங்கஞ்சாக்களை 'அஜாவா என்ற வகுப்பினர் அடிக்கடி தாக்கினர். லிவிங்ஸ்டன் இப் போர்களில் ஈடுபட விரும்பவில்லை. இவர் சமயத் தலைவரையும் இவ்வகையில் எச்சரித்திருந்தார். ஆனால் அஜாவாக்களால் நன்மக்கள் துன்புறுவதைக் காணப்பெறாத சமயத்தலைவர், மங்கஞ்சாக்கள் பக்கம் நின்று உதவினர். இப்போர்களில் ஈடுபட்டும், நோய்வாய்ப்பட்டும் சமயத்தலைவர் குழாத்தில் ஒருவர் நீங்க மற்றவர் அனைவரும் இறந்தனர்.
மீண்டுவர ஆணை
, 20
ச்
ஷீரேயின் வடக்கிலிருந்த "ரோவுமா ஆற்றை ஆராய்வதில் ஈடுபட்டிருந்து மீண்ட லிவிங்ஸ்டன் இச் செய்தியைக் கேட்டு மனம் உடைந்தார்.பின் கடற்கரையில் வந்து சேர்ந்ததும் அடுத்த கப்பலில் வந்த செல்வி மக்கென்ஸி முதலிய நண்பர்களைக் கண்டார்; அவர் கொண்டிருந்த கடிதம் மூலம் அரசாங்கத்தார் தம் பணியினின்று தம்மை நீக்கி மீண்டுவரப் பணித்ததாக அறிந்தார்.
மனைவியார் இறப்பு
‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்ற முதுமொழிப்படி இத்துயரச் செய்தியை அடுத்து லிவிங்ஸ்டன் வாழ்வில் மற்றோர் இடியும் வீழ்ந்தது. செல்வி மக்கென்ஸியுடன் நன்னம்பிக்கையில் சில நாள் இன்ப வாழ்வில் குலவியிருந்த லிவிங்ஸ்டன் மனைவியார், அவ்வாண்டு ஏப்ரல் 27 இல் திடுமென மறைவுற்றார். ஆயிரம் முறை எமனை எதிர்த்துப் போரிட்ட ஆண் சிங்கமான லிவிங்ஸ்டன், அப்போது சிறு பிள்ளைபோல் தேம்பித் தேம்பி அழுதனராம்.
கலங்கா உள்ளம்
லிவிங்ஸ்டனுக்கு இடையில் வந்த புகழ்ச் செல்வியும், இவர் நூலால் வந்த திருச்செல்வியும் இவரை விட்டு நீங்கினர். இப்போது இவர் வருவாய் அற்றுக் கடன் பட்டார். இந் நிலையில் இவர், தம்மிடமிருந்த 'நயஸா' என்ற சிறு கப்பலை