13. மூன்றாம் பிரயாணம்
அழைத்தமைக்குக் காரணம்
லிவிங்ஸ்டன் இங்கிலாந்துக்குப் போன ஆண்டு, பாமர்ஸ்டன் பெருமகனார் ‘அமைச்சர் குழு' ஆட்சியின் இறுதி ஆண்டாக இருந்தது. பாமர்ஸ்டன் எப்போதும்போல அவர் மீது விருப்பம் உடையவராகவே இருந்தார். ஆயினும், 'போர்ச்சுகீஸிய அரசாங்கம் உங்கள் செயல்கள் எங்களுக்கு மாறாக உள்ளன என்று கூறியதனாலேயே உங்களை மீட்டும் அழை க்கு வேண்டியதாயிற்று' என்ற அவர் கூறினார். பாமர்ஸ்டன் பெருமாட்டி லிவிங்ஸ்டனுக்குத் தேநீர் விருந்தளித்துப் பாராட்டினார்.
இரண்டாம் பிரயாணம் பற்றிய நூல்
லிவிங்ஸ்டன் தம் குழந்தைகளுடன், ஸ்காட்லாந்தின் பழம் பெருங் குடியினருள் ஒருவரான அர்கைல் கோமான்' அழைப்பை ஏற்று அவரூராகிய இன்வெராரி2 சென்றார். அங்கே அக்கோமானின் தூண்டுதலால் தம் இரண்டாம் முறைப் பயணம் குறித்து நூல் ஒன்று எழுதினார்
அடிமை வாணிகம் ஒழியவேண்டும்
1
1864 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் 'பாத்' ' என்னும் இடத்தில் லிவிங்ஸ்டன் பேருரை ஆற்றினார். அப்போது, 'அடிமை வாணிகத்தில் மூழ்கி அழியும் கிக்காஃப்ரிக மக்களை ஈடேற்றும் பணியில் ஆங்கில இளைஞர் பெருவாரியாக முனையவேண்டும்”எனக் கூறினார். அக்கூற்று, போர்ச்கீஸிய அரசியலார் பகைமையை இன்னும் பெருக்குவதை இவர் நன்கு அறிவார். ஆயினும் நற்காரியத்தில் யாவர் பகைமையையும் இவர்