டேவிட் லிவிங்ஸ்டன்
59
கரையில் இறங்கினார். இவர் குழாத்தில் இருந்தவர் ஏறக்குறைய முப்பத்தறுவர் ஆவர். ஆஃப்ரிகத் தட்ப வெப்ப நிலையிலும் அங்குள்ள 'செட்சி" என்ற எறும்புவகையினிடையிலும் எவ்வெவ் விலங்குகள் வாழமுடியும் என்று காண, லிவிங்ஸ்டன் இந்தியாவிலிருந்து ஒட்டைகள், எருமைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்திருந்தார்.
அராபியர் தொல்லை
ஏரியை
ஆகஸ்டு 8 இல் லிவிங்ஸ்டன் நயாஸா 8 அடைந்தார். அராபியர் இவரை முற்றிலும் பகைத்து உதுக் கினர். ஏரியின் படகுகள் அனைத்தும் அவர்கள் கையில இருந்தமையால், லிவிங்ஸ்டன் ஏரியைக் கடக்க முடியாமல், தம்மைச் சேர்ந்தவருடன் தெற்குப் பக்கமாகச் சுற்றிச் சென்றார். அராபியர்கள், ஆஃப்ரிகத் தலைவர்களை ஒருவர்க் கெதிராக ஒருவரைத் தூண்டிவந்ததனால் ஷீரே ஆறு ஏரியிலிருந்து வெளிவரும் இடத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தது. அவர்களின் தூண்டுதலாலே லிவிங்ஸ்டன் குழாத்திலுள்ள பலர் மனங்ககெட்டு லிவிங்ஸ்டனைவிட்டு ஃஜான்ஸிபாருக்குச் 2 சென்றனர் அங்குச் சென்ற அவர்கள் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாகக் கதைகட்டி விட்டார்கள். அதனைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து நில ஆராய்ச்சிக் கழகம் உண்மையைக் கண்டறிய ‘யங்” என்பவரை அனுப்பிற்று, பிறகு யங் எழுதிய அறிக்கைமூலம் அக்கழகம் உண்மையை உணர்ந்தது.
தங்கனீகா ஏரி
லிவிங்ஸ்டன் இதன் பின் வடமேற்காகத் 'தங்கனீகா’ ஏரி நோக்கிச் சென்றார். உணவுப் பொருள்கள் செலவாய் விட்டதால் நாட்டச் சோளமும் ஆட்டுப் பாலும் மட்டுமே அருந்தும் நிலைமை ஏற்பட்டது. லிவிங்ஸ்டன், ஆட்கள் இல்லாமையால் மூட்டை சுமக்கக் கூலி ஆள் அமர்த்தினர். இதற்கும் கையிலிருந்த பணம் போதவில்லை. டிசம்பர் திங்களில் லிவிங்ஸ்டனே நோய்வாய்ப்பட்டார். இவரின் கால்நடைகளும் மருந்துகளும் அடிக்கடி திருடுபோயின. இத்தனை தொல்லை களுக்கு இடையில், லிவிங்ஸ்டன் ஏப்ரலில் லியெம்பா ஏரியை-