பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 7

அடைந்தார். இஃது உண்மையில் தங்கனீகா ஏரியின் தென்கோடியே என்பது பின்னால் தெரியவந்தது.

மொயிரோ பங்வியோலோ ஏரிகள்

லியெம்பாப் பகுதியில் போர்ப்புயல் பரந்திருந்ததால் லிவிங்ஸ்டன் தெற்குநோக்கித் திரும்பினார். நைல் ஆற்றுத் தலையிடமாகக் கருதப்பட்ட மொயிரோ ஏரியை 3 நாடினார். 'உபுங்கு' என்ற குழுவினர் லிவிங்ஸ்டனைப் பெருந்தன்மை யுடன் நடத்தினர். 'முகமது மொகாரிப்4 என்னும் அடிமை வணிகன் அராயினாக இருந்தும் லிவிங்ஸ்டனுக்கு வழித் துணைவனாக இருந்து உதவினான். அவன் அளித்த விருந்து, நெடுநாள் நல்லணவு ல்லாதிருந்த லிவிங்ஸ்டனுக்கு அமுதமாக இருந்தது. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் லிவிங்ஸ்டனும் மற்றையோரும் மோயிரோ ஏரியை அடைந்தார்கள். இந்த ஏரி 40 கல் அகலம் உடையதாக இருந்தது. லிவிங்ஸ்டன் அதனை நன்கு ஆராய்ந்தார். லிவிங்ஸ்டன் இப்போது மேற்குறிப்பிட்ட ஏரியின் தெற்கில் அதனினும் பெரிதெனக் கொள்ளப் பட்ட பங்வியோலோ என்னு ம் ஏறியைக்காண மீட்டும் தெற்கே சென்றார். மொகாரிப் இதனைத் தடுக்கவும் எதிர்க்கவும் முயன்றும் பயன் படவில்லை. லிவிங்ஸ்டன் ஜுலை 18 இல் அந்த ஏரியைக் கண்டு அதன் அழகிய பரப்பை நோக்கி மகிழ்ந்தார். அதன்பின் இவர் மீண்டும் அராபியருடன் வந்து சேர்ந்தார்.

காங்கோவின் கிளையாறு

5

ல்

லிவிங்ஸ்டன் லுவாலாபா ஆறு' நைல் ஆற்றில் சென்று சேரும் கிளைதானா என்று காண விரும்பினார். எனவே, இவர் லுவாலாபா ஆற்றின் வாயாகச் சென்று அக்டோபர் 25 இல் மனியூமாக்கள்2 நாட்டின் தலைநகரான பம்பார்3 என்னும் இடத்தை அடைந்தார். இங்குத் தம் ஆட்களுக்காவும் கடிதங்களுக் காகவும் சிலநாள் காத்திருந்தார். இறுதியில் ஆட்களில் ஒரு சிலரே வந்தனர். கடிதங்களில் 40 வராமல் தடுக்கப்பட்டு, ஒன்றே வந்து சேர்ந்தது. வந்த மக்களும் அளவில்லாத மறையில் சம்பளம் கோரிப் பயணத்தைத் தடுக்கப் பார்த்தார்கள்.