பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் – 7

பெற்றனர். ஆனால் அவர்கள் மன்னிப்புக்கு உரியவரல்லர் என்பது விரைவில் தெரியவந்தது. டுகும்பெ' என்ற ஒருவர் அராபிய நண்பர் சிலருடன் லிவிங்ஸ்டனைக் கண்டனர். லிவிங்ஸ்டனுக்க நாட்டில் படகு கிடைக்காததின் காரணம் அவ்வேலையாட்கள் லிவிங்ஸ்டனைப் பற்றிப் பொல்லாங்கு கூறிப் பழி பரப்பியதே என்று அவர் காட்டினர். அதன்பின் லிவிங்ஸ்டன் அவர்களை வேலையினின்றும் அகற்றி, டுகும்பெ என்பவரிடம் 2000 வெள்ளி (400 பொன்) கொடுத்துப் பத்து ஆட்கள் பெற்றார்.

ஸ்டான்லியின் வருகை

லிவிங்ஸ்டன் மீண்டும் உஜ்ஜியை அடைந்தார் இங்கே அராபியரும் பிறரும் இவரை நண்பராக நடத்தினர். எனினும் பலர் இவர் பொருள்களைத் திருடினர். உடலும் தளர்ந்து உள்ளத்தில் உரமும் சிதைந்த இந்நேரத்தில் ‘ஹூ ஸி3 என்பவர் லிவிங்ஸ்டனிடம் வந்து ஓர் ஆ'கிலேயர் வந்திருப்பதாக அறிவித்தார். ஆனால், வந்தவர் லிவிங்ஸ்டன் நண்பர் ஸ்டான்லியே யாவர். அவர் உண்மையில் அமெரிக்கா 'நியூயார்க் ஹெராலடு ’என்ற அமெரிக்கச் செய்தித்தாள் நடத்துவோரால் அனுப்பப்பட்டவர். அவர் அனுப்பப்பட்டதன் நோக்கம் லிவிங்ஸ்டனைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுவதும் இறந்திருந்தாராயின் பாராட்டுடன்லிவிங்ஸ்டனின் எலும்புகளை எடுத்துவருவதுமே யாகும். லிவிங்ஸ்டனை உயிருடன் கண்ட அவர் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. லிவிங்ஸ்டனும் அவரைக் கண்டவுடன் ‘கரைகாணாப் புயற்கடலிற் புணைகண்டாற் போல' அளவிலா உவகை கொண்டார், ஏனெனில் அவர் வரவு லிவிங்ஸ்டன் வாழ்வில் ஒரு புதிய கோளின் வரவு என்றே கூறத்தக்கதாக இருந்தது. துன்பமிக்க அவருடைய பிற்கால வாழ்வில் அத பேரமைதியை உண்டு பண்ணிற்று.

அடிக்குறிப்புகள்

1.

Duke of Argy - 11

2. Inverary

4.

Sir. Roderick

3.

Bath

5. Explorer

6.

Lake Tanganyika