பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14. லிவிங்ஸ்டனின் மறைவு

உரிய காலத்தில் உதவி

லிவிங்ஸ்டனுக்கு உரிய நெடுநாளைய கடிதங்கள் ஒரு பணியாளிடமிருந்தன. ஸ்டான்லி லிவிங்ஸ்டனைக் காண வரும்போது அவ்வேலையாளையும் அழைத்து வந்திருந்தார். அக்கடிதங்களுள் லிவிங்ஸ்டன் மக்கள் எழுதிய கடிதங்களும் இருந்தன. இவையன்றி ஸ்டான்லி வேறு நற்செய்திகளும் ம் கொண்டுவந்திரந்தார். அஃதாவது பிரிட்டிஷ் அரசாங்கம் மீட்டும் லிவிங்ஸ்டனின் பணிகளின அருமை பெருமைகளை உணர்ந்து இவருக்கு 1000 பொன் தர இணங்கியது என்பதே யாகும். ஸ்டான்லி கொணர்ந்த பொரள்களால் லிவிங்ஸ்டன் உடல்நிலையும் செல்வ நிலையும் உயர்வுற்றன, செய்திகளால் உளநிலையும் செம்மையுற்றது.

இருவரும் செய்த ஆராய்ச்சி

லிவிங்ஸ்டன் கண்டறிய வேண்டுமென ஆவல் கொண்ட செய்திகள் இரண்டு. ஒன்று லுவாலாபாத் தலை நிலம் பற்றியது, மற்றொன்று தங்கனீகா வடபுற ஆராய்ச்சி. இவற்றுள் பின்னதையே முதலில் கண்டறிய லிவிங்ஸ்டன் முடிவு செய்தார். எனவே ஸ்டான்லியுடன் 1871 ஆம் ஆண்டு நவம்பர் 16 இல் பயணமானார். 'அவர்கள் தாங்கள் நேரிற் கண்டவற்றி லிருந்து, 'தங்கநீகா ஏரிக்குள் லுஸைஜ்" என்ற ஓராறு பாய்ந்த தாயினும் எந்த ஆறும் அதனினின்று வெளிவரவில்லை' என்று உணர்ந்தார்கள். அதன்பின் அவர்கள் டிசம்பர் 13 இல் உஜ்ஜி வந்து சேர்ந்தார்கள்.