பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் – 7

லிவிங்ஸ்டனுக்கு வற்புறுத்தினார். ஆனால் லிவிங்ஸ்டன் எப்படியாவது எடுத்த பணியை முடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தார். எனவே உனான்யெம்பி' வரையில் சென்று அங்குள்ள தம் பொருள்களை ள்களை எடுத்துக் கொண்டு, தாய் நாட்டிலிருந்து வரும் கடிதங்களையும் பார்த்துவிட்டு அதன்பின் வடக்கே செல்வது என்பது உறுதியாயிற்று. லிவிங்ஸ்டன் இப்போது டான்லியின் விருந்தினராதலால் இவர் ஏறிச் செல்ல நல்ல கழுதை ஒன்று (அந்நாட்டு வழக்கப் படி) அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், மக்கட் பணியாளருள் சிறந்தவரான லிவிங்ஸ்டன் அதனை நடக்க விட்டு, எல்லோரையும் போலத் தாமும் நடந்தே வந்தார். அங்ஙனம் நடந்தமையால் காலெல்லாம் கொப்புளங்கள் உண்டாயின. இதனால் லிவிங்ஸ்டன் உனான் யெம்பில் சிலநாள் தங்கினார். அங்கே லிவிங்ஸ்டன் பொருள்களிற் சில கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. சில, கரையான்களுக்கு இரையாயின. ஆயினும் எஞ்சியவையே லிவிங்ஸ்டனுக்கு ஏராளமானதாகத் தோன்றின. நண்ப ரிருவரும் பிரியா விடை பெற்றது கண்கொள்ளாக் காட்சி யாக இருந்தது.

அரிய குறிப்புகள்

ஸ்டான்லி சென்ற சில மாதங்கட்குப் பிறகே அவரால் ஃஜான்ஸிபாரிலிருந்து ஆட்கள் அனுப்பப்பட்டனர். லிவிங்ஸ்டன் அதுவரையில் அங்கிருந்து அந்நாட்டில் கண்ட பல அருஞ்செய்திகளைச் சுவைபடச் சித்தரித்துவந்தார். அவற்றுள் அந்நாட்டுக்கொடிய பாம்புகளைப் பூனை கொல்வதை விவரிக்கும் சித்திரம் ஒன்றாகும். பாம்பு அறியா வண்ணம் பூனை பதுங்கிவந்து பாம்பின் படத்தில் ஓர் அறை அறைந்து தலையை அழுத்திக் கொண்டு கழுத்தைக்கடித்து எறிந்துவிடும்; பின் துடிதுடிக்கம் உடலைவிட்டுப் போய்விடுமாம். பூனையின் வ்வருஞ் செயலுக்காகவே எகிப்தியர் பூனையை வணங்கி வந்தனர் என்ற அவர் கருதினார். ற

நாட்டுப் பிள்ளைகள்

‘தங்கனீகாப் பகுதியில் நாட்டு மக்களிடையே தாய்மார் தம் குழந்தைகளை அடிமைகளாக விற்றனர்' என்ற செய்தி