பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 7

68

திருக்கிறேன்; பாலாடு வாங்கும்படி கூறியிருக்கிறேன். மோலிலாமோ ஆற்றின்' பக்கம் வந்து சேர்ந்திருக்கிறோம்” என்று எழுதினார்.

லிவிங்ஸ்டன் மறைவு

மறுநாட் காலை முதல் லிவிங்ஸ்டனுக்குப் பார்வை குன்றியது. ஒலிகளைக் கேட்டறியும் அறிவும் குன்றியது அன்று இரவு லிவிங்ஸ்டன் வெந்நீர் கேட்டார். எனினும் அதனை முட்டுப்பாட்டுடன் தான் உட்கொள்ள முடிந்தது. காலை 4 மணிக்குக் கடவுளைத் தொழுத நிலையிலேயே லிவிங்ஸ்டன் ஆவி இறைவனடி சார்ந்தது. ஆஃப்ரிகாவின் மாபெரு நண்பராகிய இவர் ஆப்ரிகாவின் மாபெரு நண்ப

ராகிய இவர் ஆஃப்ரிக மண்ணிலேயே தம் உடல் நீத்தார்.

உடல் அடக்கம்

லிவிங்ஸ்டனின் பணியாட்கள், லிவிங்ஸ்டன் உயிர் நீத்த பின்பும் இவர் பக்கம் நின்று மாறாது பல துன்பங்களைத் தாங்கி இவர் உடலைத் துறைமுகம் வரை கொண்டுவந்து சேர்த்தனர். லிவிங்ஸ்டன்இருதயமும், குடலும் ஜான்ஸிபாரில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின் உடல் உலர்த்தப் பட்டுக் கப்பலில் ஸதாம்ப்டன் கொண்டுவரப்பட்டு ஆங்கில நாட்டார் அனைவர் கண்ணீரிடையேயும், பாராட்டிடையேயும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அடிக்குறிப்புகள்

1. Lusize

2.

Unanembe