பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. லிவிங்ஸ்டனின் அருங்குணங்கள்

பெருமைக்கு மூலகாரணங்கள்

உலக வரலாற்றில் தம் பெயரைப் பொன் எழுத்துக் களில் பொறித்த புகழுடைய பெரியோர் வாழ்க்கை வரலாறு களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் பெறப்படவன இவையாகும். ஒன்று, அவர்கள் பெருமைக்கெல்லாம் மூலகாரணமாக இருப்பது அவர்கள் கொண்ட உயர் நோக்கங்களும் குறிக்கோள்களும் ஆகும். இரண்டு, அக் குறிக்கோள் வாழ்க்கையில் அவர்கள் தம் திட்டத்தை எவ்வளவு உயர்வாகத் தீட்டமுடியுமோ அவ்வளவு உயர் வாகத் தீட்டினர் என்பது நெப்போலியன், நெல்ஸன் போன்ற பெரியார் தம் சொறொகுதியில் ‘முடியாதது' என்ற சொல் இல்லை என்று குறிப்பிட்டது இதனையே யாகும். லிவிங்ஸ்டன் தம் வாழ்க்கையின் தொடக்கத்தில் தம் விளையாட்டிலும் இப்பண்பைக் காட்டினார். இவர் மற்றப் பிள்ளைகள் ஏறாத உயரத்துப் பாறை மீதேறித் தம் பெயர் பொறிக்க முயன்றார். வாழ்க்கைப் பணியிலும் இவர் இதே உயர் பேரார்வம் கொண்டிருந்தார் என்பதைத் தம் இறுதி

நாள்

வருமுன் கைக்குறிப்பில் எழுதிய ஒரு செய்தி காட்டுகிறது,“என் இறுதி முயற்சியாகிய இவ்வொன்றைச் செய்ய என்னால் முடியுமாயின், அது வேறு எவராலும் மறக்க வொண்ணாச் செயலாகிவிடும். என்னுடைய இந்த இறுதி முயற்சியின் போதுதான் தீயோன்(சைத்தான்) நோய், இடையூறு, மனஉடைவு, வலிவின்மை ஆகிய தடைகளால் என்னை முறியடிக்கப் பார்க்கிறான். இறைவன் திருவுளம் ன்பக்கமிருந்தால் நான் நற்பேறு உடையவனே" என்பதேயாகும்.