பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

வீர வாழ்க்கை

அப்பாத்துரையம் – 7

லிவிங்ஸ்டனை ‘ஆஃப்ரிகாவின் இளம் சிங்கம்' என்று கூறுவதுண்டு. இவர் சிங்கங்களின் வேட்டையைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில்,"சிங்கங்கள் பிறர் எதிர்த்தபோதன்றிப் போரிடா, அவை வலிமையுடையனவே அன்றி வீரங் குன்றியவை” எனக் கூறியுள்ளார். விலங்காகிய சிங்கம் எப்படியாயினும் ஆஃப்ரிகச் சிங்கமாகிய லிவிங்ஸ்டனிடம் இக் குறையைக் காணமுடியாது. தீமையைக் கண்ட இடத்தி லெல்லாம் லிவிங்ஸ்டன் சீறி எழுந்து அதனை அறைந்து கொல்லத் தயங்கியதில்லை. அத் தீமை பகைவரிடமிருந்த போது மட்டுமன்றி, தம்மவரிடமிருந்தாலும் அதனைக் கண்டிக்க இவர் தயங்கியதில்லை. ஆஃப்ரிகா, ஐரோப்பிய வீரர் பலருக்குக் கல்லறையாக அமைந்த நாடாகும். அத்தகைய நாட்டில் கொடிய மக்களிடையே மட்டுமின்றி மக்கள் கொடுமையினும் மிக்க பகைகளாகிய நோய், விலங்குகள், பாலைவனங்கள், செட்சி எறும்புகள் ஆகியவற்றினிடையேயும் லிவிங்ஸ்டன் வாழ்ந்து, பல்லாயிரங் கல் தொலை பயணம் செய்து தம் பணியை வெற்றியுற முடித்தது இவ்வீரத்தின் பயனாகவேதான்.

அரிய வீரம்

வீரமென்பது போர்க்களத்தில் எதிரிகள் முன் மட்டும் பயன்படுவது. அது வெஞ்சினத்தால் வலியுறுவது. ஆனால் லிவிங்ஸ்டன் வீரம் அத்தகையது அன்று. நோயுடன் போராடுவதும் தோல்வியுடன் போராடுவதும் வெறும் வெறுபிடித்த வீரமன்று. அது பொறுமையும் விடா முயற்சியும் மன உறுதியும் உடைய வீரமாகும். காலன் பிடி தம் மீது தாவியபோதும் எடுத்த காரியம் விடாமல் இறுதி மூச்சுவரைப் பாடுபட்ட பெருமை, லிவிங்ஸ்டன் போன்ற ஒரு சிலர்க்கே உரியதாகும்.

குடும்பத்தில் அன்பு

வீர வாழ்க்கையுடையவர் பலர் நெஞ்சில் ஈரமற்றவராக ருத்தல் காணலாம். அத்தகைய வீரம் அவர்களைப் பெரியார் அக்கத் தக்கதன்று. லிவிங்ஸ்டனோ குடும்ப வாழ்விலும் பொது வாரவிலும் அன்பே உருவானவர்; தாய்