பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




டேவிட் லிவிங்ஸ்டன்

ச்

71

தந்தையரிடம் தம் கடமை உணர்ந்து அன்பு காட்டியவர் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் மனைவியுடன் இருந்த போதும், பிரிந்தபோதும், மனைவியார் இறந்த பின்னும் அவரை இவர் மனக்கோவிலில் கொண்டு போற்றினார். இச் செய்தி எவர் மனத்தையும் கனிவுறச் செய்யும் இன்ப நாடகமாகும். லிவிங்ஸ்டன் தம் புதல்வர் புதல்வியாரிடம் அன்பு கொண்டிருந்த தோடு அவர்கள் தம் குடி உயர்வுக்கு ஒத்தவராக இருப்பது கண்டு இறும்பூது எய்தினார். ஸ்டான்லி போன்ற நண்பர் தம் பணியினும் மிகுதியாகத் தம் உடல் நலத்தை வற்புறுத்திய காலையில் லிவிங்ஸ்டன்புதல்வி ஆக்னிஸ், “என்னை எண்ணி உங்கள் பணியைத் துறந்துவரவேண்டு மென்பதில்லை. உங்கள் பணியை நிறைவேற்றி வர விரும்பினீர்களாயின், அதனால் இறைவன் உள்ளம் நிறைவுறும். எங்கும் அது நிறைவையே தரும்” என்று எழுதியிருந்தார். அதுகண்ட லிவிங்ஸ்டன் ஸ்டான்லியிடம், 'இதோ என் பழங்குடியின் ஒரு சிறு அரும்பு என்று கூறிப் பெருமைப்பட்டாராம்.

அருள் உள்ளம்

லிவிங்ஸ்டன் அன்பு,அவர் குடும்பத்துடன் மட்டும் நின்றிருந்தால்கூட அஃது ஒரு கவிஞன் சித்திரத்துக்கு உரியதாயிருக்கும். ஆனால், அது குடும்ப எல்லையைக் கடந்து நாட்டெல்லையையும் கடந்து உலகையே தழுவி நின்று ‘அருள்’ என்னும் பெயர்பெற்றது. சமயப்பற்றிலும் அது தம் சமயம் பிறர் சமயம் என்ற வேற்றுமை கடந்தது. ஆஃப்ரிக மக்கள் தம் சமயத்தில் சாராதவிடத்தும் அவர்கள் உள்ளார்ந்த நலன்களைக்கேட்க லிவிங்ஸ்டன் தயங்கியதில்லை. மொகாரிப் போன்ற அராபியர் களை ஒப்புறரவு காட்டியும் அனைத்துலகும் தம் குடியென நடத்தி அனைவரையும் தம் வயப்படுத்தினார். இக்காட்சி க்ண்ட ஸ்டான்லி போன்ற பெரியார், லிவிங்ஸ்டனைத் தெய்வத்துக்கு அடுத்த படியில் வைத்துப் போற்றியதில் வியப்பில்லை.

இனிய சொல்லாளர்

வெளியாருக்குப் பெரியாராக இருக்கும் பலர் வீட்டா ருக்குச் சிறியாராக நடப்பதுண்டு. லிவிங்ஸ்டன் தன் பணி