72
அப்பாத்துரையம் - 7
யாட்களிடத்திலம் நடுநிலையும் ஒத்துணர்வும் நீக்கியதில்லை. லிவிங்ஸ்டன் பணியாள் ஆகிய ஸூஸி என்பவன் ஒருநாள் குடிவெறியால் தம் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டார்; அதற்காக இவர் சினங்கொள்ளாது அவனைத் தட்டி எழுப்பி, 'குடிப்பதில்லை என்ற உறுதிக்கு இது தான் எடுத்துக்க ாட்டோ?' என்றனராம். இப்பெருந்தன்மையின் பயனாகவே கடுமையான தலைவரைவிட இவரிடம் பணியாட்கள் பற்றும் அச்சமும் பன்மடங்கு உடையவராக இருந்தனர்.
கிறிஸ்துவின் வாழ்க்கை
ஆஃப்ரிக மக்களிடையே லிவிங்ஸ்டன் ஏற்படுத்திய மனமாற்றம் சொல்லும் அளவினதன்று. இவருக்கு முன்னும் பின்னும் வெள்ளையர் செய்த பல பழிகளையும் படிப் படியாக ஆஃப்ரிகர் மனத்தினின்றும் அகலச்செய்வதா யிருந்தது இவர் அருள் நிறைவு. இவரை ஒரு முறை அறிந்த ஆஸப்ரிக மக்கள், வெள்ளையரினும் மிகுதியான பொறுமை யும் பெருந்தன்மையும் உடையவராய் இன்னா செய்தாரையும் நன்னயம் செய்து ஒறுக்கும் தன்மை உடையவராயினர். இவ்வகையில் லிவிங்ஸ்டன் வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை என்று கூறுவதைவிடக் கிருஸ்துவின் வாழ்க்கையாகவே இருந்தது என்று கூறலாம்.
நடுவுநிலை உணர்வு
லிவிங்ஸ்டனின் நடுவுநிலை உணர்வு வியக்கத் தக்க தாகும். இவர் தாம் என்றும் நேர்மையுடையவர் ஆயினும், பிறர் நேர்மை தவறியவிடத்தும் நடவுநிலைமை நீங்கிச் செயலாற்று வதில்லை. இவருடைய அராபிய நண்பர், இவருக்குமாறாக நடந்து படுகொலைகள் செய்தபோதும் தாக்கப்பட்டவர்க்குத் தாக்குதலின் பின் உதவினரேயன்றி அவர்களுக்காகக்கூடச் சண்டையில் கலக்கவில்லை. அராபியர் பிழையுணர்ந்து பிழை பொறுக்கவேண்டியபோது, 'யானே பிழைகள் நிறைந்தவன்’ என்று கூறினர் என்றால், இவருடைய முழு அருள் நிலையின் திறத்தை என்னென்று கூறுவது.