பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




டேவிட் லிவிங்ஸ்டன்

துறவு வாழ்க்கை

73

தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகிய லிவிங்ஸ்டன் வாழ்க்கை, உண்மைத் துறவு வாழ்க்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 'சிலுவையைத் தாங்கி நட' என்ற இயேசு பெருமானின் விவிலிய உரையைச் சிலர் 'சிலுவைக் குறி தாங்கி நட' என்று கொள்ளுவர். ஆனால் அவர் தியாக வாழ்வை ஏற்று நட என்று கொண்டார். ஆணவம், காமியம், மாயை (தற்பெருமை, தன்னலம், பொருட்பற்று) ஆகிய முமமலங்களும் (குற்றங்களும்) அறுத்த நீற்றுக்கு அறிகுறி, நீது என உணராது புறநீறுமட்டு மணிந்து தருக்குபவர் உண்டு. உண்மைத்துறவு புறவேடமன்று. புறவேடத்துடன் அதன் உட்பொருளாகிய தன்னலத் தியாகமும் பொதுநலத் தொண்டுமே என்பதை லிவிங்ஸ்டன் வாழ்வு எடுத்துக் காட்டுகிறது.

கல்லறை வாசகம்'

வெஸ்ட் மின்ஸ்டர் மண்ட மண்டபத்தின் லிவிங்ஸ்டன் கல்லறைமீது இவர் நாட்குறிப்பினின்றெடுத்த ஒரு வாசகமே கல்லறை வாசகமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. லிவிங்ஸ்ட னின் வாழ்க்கைக் குறிக்கோளின் உயர்வையும் இவர் சமயப் பணியின் விரிவையும் அரள் விரிவையும் அது நன்கு எடுத்துக் காட்டுகிறது. “இறைவனுடைய மங்காத அருட் செல்வங்கள் மாந்தர் அனைவர்மீதும் பொழிக. அமெரிக்கர், ஆங்கிலேயர், துருக்கியர் அனைவர் மீதும் பொழிக" என்பதே அக்குறிப்பு ஆகும்.

சமய உணர்வு

ஸ்டான்லி லிவிங்ஸ்டனது சமய உணர்வுபற்றிக் கூறு கையில், “அவரது சமயம், அவர் உள்ளார்ந்த இடைவிடா விழிப்புமிக்க வாழ்க்கை நடைமுறையேயாகும். அஃது அவர் யாரிடமும் வெளிப்படையாகக் காட்டும் அல்லது உரத்து விளம்பரம் செய்யும் பொரளன்று. அஃது அவர் யாரிடமும் வெளிப்படையாகக் காட்டும் அல்லது உரத்து விளம்பரம் செய்யும் பொருளன்று. அஃது அவர் செயல் ஒவ்வொன்