பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

81

இயங்குகின்ற பொருள்களின் நிலைகளையும் இயக்கங்களையும் ஆராய்ந்தார். அவற்றின் ஒழுங்கு முறைகளை வகுத்துத் தொகுத்து அளவை யிட்டார். இவையே ‘இயங்கியலின்'(Physics) அடிப்படை ஆயிற்று. இக் காரணத்தால் நியூட்டன் இயங்கியலின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்.

சென்ற முந்நூறு ஆண்டுகளின் அறிவியல் ஆராய்ச்சிகள் யூக்லுட் கண்ட அடிப்படையிலும் நியூட்டன் கண்ட அடிப்படை யிலுமே நடைபெற்று வந்துள்ளன.

20-ம் நூற்றாண்டுக்குள் அறிவியல் ஆராய்ச்சி யூக்லிட் முடிவுகளையும்,நியூட்டன் முடிவுகளையும் தாண்டி நெடுந்தொலை வளர்ந்து விட்டது.பல நுட்ப இயக்கங்களை அவர்கள் முடிபுகள் விளக்கத் தவறின. பல பாரிய இயக்கங்கள் நுண்ணிய அளவில் அவற்றுக்கு முரண்பட்டனவாகத் தோன்றின. யூக்லிட்,நியூட்டன் ஆகியவர்களின் முடிபுகள் தவறென்று கொள்வதா,

இயற்கைதான் தவறுகிறது என்று கொள்வதா? இந்தஇருதலைக் கேள்வி அறிஞர் உள்ளங்களில் அலை பாய்ந்தது. அறிவியல் அறிஞர்கள் பெரிதும் இடர்ப்பாடுற்றனர்.

லாரென்ஸ், (Lorentz) மைக்கேல்சன், (Michaelson) ஏர்ன்ஸ்ட் மாக் (Ernst Mach) முதலிய பேரறிஞர்கள் இவ்விடர்ப்பாடுகளில் கருத்துச் செலுத்தி ஆராய்ந்தனர். அவற்றைக் கணித்து அளவையிட்டனர். ஆனால், அவர்களால் இடர்ப்பாடுகளை முற்றிலும் விளக்கமுடியவில்லை. பழைய அடிப்படைகள் ஆட்டங்கண்டன. ஆனால் இன்னும் அவையே அடிப்படை களாய் இருந்தன. ஏனென்றால், வேறு அடிப்படை

காணப்படவில்லை.

இந்நிலையில் இயற்கையே தன் உரிமைச்செல்வனாக ஐன்ஸ்டீனை அனுப்பிற்று என்னலாம். அவர் விளக்கங் களின்மேல் விளக்கங்களாகப் புதுப்புது விளக்கங்கள் கொண்டு வந்தார். அவை இடர்ப்பாடுகளை விளக்கின. புதிய மெய்மை களையும் காட்டின. அது மட்டுமோ? யூக்லிட், நியூட்டன் ஆகியோர் முடிபுகளையும் அவை விளக்கி, அம்முடிவுகளுக்குப் புதுப்பொருளும் புது வண்ணமும் தந்தன.