பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

79

பெண்களுக்குச் செல்வ உரிமையும் தொழிலுரிமையும் இல்லா விட்டால், அவர்களுக்குத் தன் மதிப்பும் உரிமை ஒழுக்கமும் இருக்கமுடியாது என்பதை இந்நூல் பசுமரத்தாணிபோல் வாசகர் மனத்தில் என்பது

பதியவைக்கிறது. குடும்ப வாழ்வு

ஆணைச்சார்ந்து வாழும் வாழ்வு. அதில் காதல் ஒரு அடிமைப் பொருளாக மட்டுமே இயங்கமுடியும், காதலையன்றி வேறு தொழிலுரிமையோ செல்வ உரிமையோ அற்ற பெண், செல்வ நிலையுடைய ஒரு ஆணுக்கு ஆட்படாவிட்டால், அவ்வடிமை வாழ்வுகூட அவளுக்கு நல்வாழ்வு ஆவதில்லை. இவ்வமை வாழ்வில் வெற்றி கிட்டாவிட்டாலோ, அல்லது அதைப் பெறத் தவறிவிட்டாலோ, அவளுக்கு இரண்டே இரண்டு வாழ்க்கை நெறிகள்தான் உண்டு. ஒன்று துணிந்து பொய்ம்மைவாழ்வு வாழ்வது.மற்றொன்று பொய்ம்மையில் தவறி வெளிப்படையாக வீழ்வது. பிந்திய நெறியில் செல்பவர் தூற்றப்படுகின்றனர். வாழ்க்கையிலிருந்து ஒதுக்கப்பட்டு அழிந்தொழிந்து செல் கின்றனர் முந்திய நெறியில் செல்பவரோ திருமதி வாரன்போல. வாழ்கின்ற உலகின் ஆதரவும், மதிப்பும் பெறுகின்றனர். தன் பொய்ம்மை வாழ்வில் பெற்ற செல்வச் சிறப்பால் திருமதி வாரன் தன் புதல்வி செல்வி விவி வாரனுக்கு, உண்மையிலேயே உணர் வதற்குரிய கல்வியும், பிற வாய்ப்புக்களும் அளிக்கிறாள். ஆனால், மகள் இக்கல்வியறிவு, பண்பாடு ஆகியவற்றின் பயனாக அன்னை வாழ்வின் கயமையைப் பகுத்துக் காட்டி எதிர்க்கிறாள். திருமதி வாரன் மகளுக்குக் கூறும் மறுமொழியும், அவளது வாழ்க்கை வரலாறும் மக்களுலகின் நேர்மையற்ற முறைகளைச் சுட்டிக் காட்டிப் பழிப்பதாக உள்ளது. இந் நாடகத்தில் திருமதி வாரனும், விவி வாரனும் சிறந்த பண்போவியங்களாவர்.

காதலைச் சாடும் பண்புக்கும், காதலுணர்ச்சி நாடகத்தை எதிர்க்கும் பண்புக்கும் இந்நாடகம் சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை வாழ்க்கையால் ஆடவர் காதலின் பசப்புணர்ந்த விவி, தன் காதலனைக் காதலித்தும், அக்காதலைத்துச்சமென வீசி எறிந்து, பெண்களுக்கு உழைப்பதிலேயே உறுதிகொள்கிறாள்.

இந் நாடகம் எழுதப்பெற்று முப்பதாண்டுக் காலம் வரை, அஃதாவது 1924-வரை, அது மேடையேறவில்லை. ஏனெனில் அரசியலாரால் அது தணிக்கை செய்யப் பட்டது. தணிக்கை