அறிவுலக மேதை பெர்னாட்சா
81
Puritans) என்றும் குறிக்கப்பட்டன. இரண்டாவது தொகுதியின் பெயர் அவர் குறும்புடைய, ஆனால் இனிய, நகைத்திறப் பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
அவர் நாடகங்களிற் பல தனித்தனிச் சுவையார்வமுடைய நண்பர்களின் வேண்டுகோள்களை முன்னிட்டு எழுதப்பட்டன. அவர் நட்பின் தன்மையையும், கலையின் அருந்திறனையும் இவை குறிக்கின்றன.
உவப்பான நாடகங்கள் என்பன: 'வாளும் போர் வீரனும்;' ‘காண்டிடர்’; ‘ஊழ்கண்ட வீரன்’; 'யாருக்குத் தெரியும்?' என்பவை.
'போர் பெருமக்களின் விளையாட்டு; அதில் பந்தயம் வைத்தாடப்படும் பகடைகளான பொது வீரருக்குப் படைக் கருவிகளைவிட உணவே ஆர்வமிக்க இன்றியமையாத் தேவை.' 'போர்முறை மரபு புகழையும் துணிகரவீரத்தையும்விட, அச்சத் தையே அடிப்படை உணர்ச்சிப் பண்பாகக் கொண்டது. ஷாவின் இவ்விரண்டு கருத்து முடிவுகளையும் விளக்குவது ‘வாளும் போர்வீரனும்’(Arms and the Man) என்ற நாடகம். வர்ஜில் என்ற இலத்தீன் கவிஞரின் பெருங்காப்பியமான ஈனிடை டிரைடன் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பின் முதலடியி லிருந்தே. இந்நாடகத்தின் பெயராயமைந்த அழகிய தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை வீரப் புகழார்வத்தையே காதலாகக்கொண்ட ஒரு பெண்மணி; குடிப்பெருமை காக்கச் சிறு செய்திகளை மறைத்து அல்லாடும் அவள் அன்னை; படைத்துறை மரபும் குடிப்பொருமை மரபும் பேண விரும்பினும், எழுத்துத் திறனும் செயல் திறனும் அற்ற படைத்தலை வனான தந்தை; புகழையும் வீரத் துணிவையும் இகழ்ந்து, இடையூறுகளில் தன்னம்பிக்கையும் நகைத்திறமும் இழவாது நிற்கும் சிற்றுண்டிப் படைவீரன் (Chacolate Soldier) ஆகிய சிறந்த பண்போவியங்களைக் கொண்டது. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவனும் கூலிக்காக அயல் நாட்டில் போர் புரிபவனுமான சிற்றுண்டி வீரன் ஒரு பெண்மணியின் படுக்கையறையில் அடைக்கலம் பெறும் காட்சி உணர்ச்சி நாடகக் காட்சிகளின் சுவையுடன் நகைச் சுவையும் மிகுந்தது. 'உன் மதிப்பு நிலையாது?' என்ற வினாவுக்கு அவன் கூறும் விடை அரசியல் துறையில் ஓர் ஒப்பற்ற படிப்பினையாய்