பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அப்பாத்துரையம் - 8

அமைந்துள்ளது. "என் மதிப்புநிலை ஸ்விட்ஸர்லாந்து நாட்டின் உச்ச மதிப்பு நிலையே - அந்நாட்டின் மன்பதைக் குடியுரிமை யாளன்நிலை," என்பதே அவ்விடை. மகள் தந்தையின் உடுப்பை வீரனுக்குக் கொடுத்து அதன் பயனாக, தந்தையிடம் அதை மறைக்க அரும்பாடுபடும் தாயின் சிறு சூழ்ச்சிமுறைகள் ஒரு ஒப்பற்ற நகைக்களியாட்டமா யமைகிறது.

போரையும் போர்முறையையும் பழிக்கும் இந்நாடகத்தைக் கண்டு 'அமைதி காவலர்' எனச் சிறப்பித்துக் கூறப்படும் பிரிட்ட னின் மன்னர் ஏழரம் எட்வர்டு முனிவுகொண்டதாக அறிகிறோம்.

ஃவிளாரென்ஸ் ஃவார் நடத்திய புதிய மேடையாகிய ‘சாலை அரங்’கில்(Avenue Theratre) தம் குடும்பத்தார் அறியாது நடிப்பிலீடுபட்ட ஆர்வ நடிகையான செல்விஹார்னிடனுக்காக இந்நாடகம் நடிக்கப்பட்டது.நாடகத்தால் 4000 பொன் இழப்பு நேரிட்ட போதிலும், ஷாவின் மனம் புண்படா திருப்பதற்காக இது நெடு நாள் அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டதாம்! ஆயினும், பொருளியல் இழப்பு இவ்வகையில் நாடகத்தின் புகழையோ, நடிப்பின் புகழையோ தாக்கவில்லை. நாடகம் எங்கும் மேற் கொண்டு காட்டப் பெற்றுப் புகழ்பெற்றது.

ஸெர்வியா, பல்கேரியா நாடுகளை யறியாத ஷா சில செய்திகளையும், அந்நாட்டு மொழியின் சில சொற்களையும் உசாவியறிந்துகொண்டே இதை எழுதினார். ஆயினும், இதில் வரும் பணியாள், பணிமகள் ஆகியவர்கள் கூட பால்கன் நாடு களின் அரைஐரோப்பிய, அரை ஆசிய நாகரிகத்தை நன்கு நிழற்படுத்திக்காட்டுகின்றனர் என்று சிறந்த கருத்துரையாளரான

பிராண்டிஸ் குறித்துள்ளார்.

ஷாவின் எதிர்ப்புப் பண்புகள், அறிவுரைகள் ஆகியவற்றால் தாக்குறாமலே, தனிப்பட்ட கலைப்பண்பு மூலம் கலைமுகட்டை எட்டிய ஷாவின் நாடகம் காண்டிடா(Candida). கலைக்கட்டுக் கோப்பு வகையில் இது ஒரு கிரேக்க நாடகமோ என்று கருதத்தக்க வடிவ வனப்புடையதான் இது இலங்குகிறது. கத்தோலிக்க சமயத்துறை யாளர் கருத்திலும் இத்தாலியக் கவிஞர் கலையிலும் வீற்றிருக்கும் ‘கன்னித்தாய்’ மேரியையே அது நினைவூட்ட வல்லதாயுள்ளது.காண்டிடாவின் கணவன் ஒப்பியல் நெறியிலும், கிறித்தவ சமயத்திலும் ஒருங்கேபற்றுடைய கிறித்தவ ஒப்பியல்