பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

83

டிகளே.

நெறிக் கோட்பாடுடைய ஒரு அருட்செல்வன். அவனும் அவன் நண்பனான ஒரு இளங்கவிஞனும் காண்டிடாவின் உள்ளத்தின் நடுவிடம் பெறப் போட்டியிடுகின்றனர். பிற காதலர் காதற் போட்டியெல்லாம் உடற் காதலுக்கான போட் உடற்காதற் போட்டியிலேயே பகைமையும் பொய்ம்மையும் பழியும் உண்டு. இங்கே உடலழகினைவிட உள அழகு மிக்க ஒரு பெண்மணிக்காக இருவர் உளக்காதற் போட்டியிலீடுபடும் ஓர் இன்பக் காட்சி காட்டப்படுகிறது. இதில் பகைமையில்லை பழியில்லை; பொய்ம்மையில்லை. ஆனால், குழந்தைப் பண்புடைய சிறு தன்னலமும் அதனை ஒட்டிய நகைத்திறமும் காணப்படுகின்றன. நாடக இறுதியில் மட்டும் ஷாவின் பெண் மைபற்றிய ஒரு முடிவு வலியுறுத்தப்பெறுகிறது. பெண்கள் ஆடவர் பெருந் தகுதியிலீடு படக்கூடும், ஈடுபடுவர். ஆனால், போட்டியில் ஆடவரை வெல்லவிடுவது அவர்கள் பெருமை யன்று; அவர்கள் அடிமைத்தன்மையே. இவ்வுண்மையும் கலை நயம்படவே வலியுறுத்தப்பெறுகிறது.

முதல் முதல் தடங்கலின்றி எளிதாக மேடையேறிய ஷாவின் நாடகம் இதுவே. பதிப்புரிமைச்சார்பாக 1895-லும், விடுதலை மாளிகைச் சூழ்வரு கழகத்தாரால் 1897-லும் இது நடித்துக்காட்டப்பெற்றது.

ஷாவின் பிற்கால நாடகங்களுக்கு ஒருவகை வழி காட்டி யாயுள்ளது 'ஊழ்கண்ட வீரன்'(Man of Destiny). இது ஓரங்க நாடகம். அக்காலச் சிறந்த நடிகர்களான ரிச்சர்டு மான்ஸ் ஃவீல்டு, எலென் டெரி ஆகியவர்களை எதிர்பார்த்து இது எழுதப் பெற்றது. முந்தியவர் நடிக்க மறுத்ததனால் இது நீண்டநாள் நடிக்கப்பெறாமலிருந்து. 1897-ல் கிராய்டன் நகரில் உள்ள பேரரங்கில்(Grand Theatre) இது நடிக்கப் பட்டது.

வாழ்க்கையின் தனியுயர் வீரன் பண்புபற்றிய ஷாவின் கருத்தை விளக்கும் ஸீஸரும் கிளியோப்பாட்ராவும், மனிதனும் மீயுயர் மனிதனும் முதலிய நூல்களுக்கு இது முன்னோடியாகும். விழிப்புணர்ச்சி. தெளிந்த அளிவு, விருப்பு வெறுப்பற்ற செயல் திறம், முடிவுபற்றிய கவலையின்மை ஆகிய பண்புகள் நெப் போலியன் வாயிலாகத் தனி உயர்வீரர் பண்புகளாகக் காட்டப் பட்டுள்ளன. நெப்போலியனுடன் வீரப்போட்டி, சொற்போட்டி,