பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

||--

அப்பாத்துரையம் - 8

செயற் போட்டிகளிலீடுபடும் ‘மாயமங்கை' அவன் மனைவியால் ஒருமறை முடங்கலைக் கவர்ந்துவர அனுப்பப்பெற்ற தோழியே யாவள். அவளுடன் நெப்போலியன் ஈடுபட்டு ஊடாடும் போட்டியுரையாடல் ஓர் ஒப்பற்ற கலைக் காட்சியாகவுள்ளது.

6

யாருக்குத் தெரியும்?, ' (You Never can Tell) 1895-96-ல் எழுதப்பெற்றது. காலத்துக்கியைந்த களியாட்டக்கூத்து நிறைந்த நாடகம் ஒன்று எழுதவேண்டும் என்ற பல நண்பர் கோரிக்கைப் படி இது எழுதப்பெற்றது. இதில் உயர்தர வாழ்க்கை, பகட்டாடை யணிமணிகள், முகமூடியாடல்பாடல், இசை, நகையாடல், விருந்து முதலியன மிகுதி இடந்தரப்படுகின்றன. இதில் ஆசிரியர் எதிர்பாரா நிகழ்ச்சிப் பண்பினை இறுதிவரை திறம்படத் தொடர்ந்து இயக்கி வெற்றி பெற்றுள்ளார். ஷாவின் பல்வகைத் திறத்துக்கு இஃது ஓர் நற்சான்று. ஆனால், தம் இயல்புக்கு மாறான இத்தனை கூறுகளுக்கிடையிலும் அவர் தம் தனிச் சிறப்புப் பண்புகளையும் இணைத்துள்ளார். காதல்வாழ்வில் வெறுப்புக் கொண்டு காதலையே வெறுத்துப் பெண்ணின் முழுவிடுதலை உரிமையியக்கம் நடத்திய ஒரு மாது, அத்தகைய ஒரே தாயினால் பயிற்றுவிக்கப்பட்டும், பல வகையில் அப் பயிற்சியின் விளைவை எடுத்துக் காட்டும் அவள் புதல்வியர், பெண்டிரியக்கத்தின் புதுமைப் போக்கினுள்ளும் போட்டியிட்டுப் புதுமுறை ஆடவர் சதிகளைக் கையாளும் காதலன், காதலில் சறுக்கித் தோல்வி யேற்கும் புதுமை இளம்பெண் ஆகிய பல சுவைமிக்க காட்சிகள் ந் நாடகத்தின் விருந்துடன் விருந்தாகத் தரப்படுகின்றன. இந்நாடகத்தில் வரும் விடுதிப் பணியாள் வில்லியம் ஷாவின் ஒப்புயர்வற்ற சிறந்தகலைப்படைப்பாக விளங்குகிறான். ஷேக்ஸ்பியரின் ஃவால்ஸ்டாஃவ் ப்வ் போன்ற நாடகக்கலைப் படைப்புக்களையும் டிக்கன்ஸின் புனைகதை உறுப்போவியங் களையுமே வில்லியத்துடன் ஒப்பிட்டுக் கூறத்தகும்.

உயர்தர மேடைக்கென இயற்றப்பட்ட இந் நாடகப் தொடக்கத்தில் அம் மேடையினால் ஏற்கப்படவில்லை. ஆனால் ஷா உலகில் தம் புகழ் மேடை நிறுவியபின் அது அம்மேடைக்கு உரியதாயிற்று.

தூநெறியாளர்க்கான நாடகங்கள் என்ற தலைப்புடன், "பேய்மகன் சீடன்,” “ஸீஸரும் கிளியோப்பாட்ராவும்,” ‘முகவன்