இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவுலக மேதை பெர்னாட்சா
87
பட்டுள்ளது. இதற்கு முதலிலிட்ட தலைப்பாகிய ‘அட்ஸாஸ் மலை மாயாவிமாது.' இந்நாடகத்திடையேயும் அவர் புனை கதையிடையேயும் இடம்பெறும் சொற்றொடர் ஆகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவு ஷாவின் வறுமை வாழ்வு, போராட்ட வாழ்வு ஆகிய இரண்டுக்கும் ஒரு முடிவாக அமைந்துள்ளது. கலைச்செல்வியும் புகழ்ச் செல்வியும் அவர் வாழ்வினுட் புகுந்தனர். அவ்விருவருடனும் கைகோத்து அவர் வாழ்வில் அவருடன் பங்குகொள்ளும் பேறுபெற்ற வாழ்க்கைத் துணைச்செல்வியும் இடம்பெற்றார்.