94
அப்பாத்துரையம் – 8
உண்மையில் உயர் பண்புடைய பெண் எவ்வாறிருக்க வேண்டுமென்றும் இச்சமயத்தில் அவர் 'எலென் டெரி'க்கு வரைந்த கடிதம் ஒன்றில் குறிக்கிறார். எலென் டெரி அவர் கருத்தில் இவ்வுயர் பண்பிலிருந்து ஒரு சிறிதுதான் குறைபட்டவர் என்று அவர் கருதுகிறார் என்னலாம். (அவர் அன்னை அதில் குறைபடாதவர்; அவர் மனைவியும் குறைபடாதவராகவே காணப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.) இச் சமயத்தில் ஷா ஷேக்ஸ்பியரைக் காலத்திற் கேற்பவும் தம் கருத்துக் கேற்பவும் திருத்திக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தம் திருத்த உருப்பெற்ற ஸிம்பலின் நாடகத்தில் எலென் டெரியை இமொஜெனாக நடிக்கச் செய்யவே அவர் இக்கடிதத்தில் வற்புறுத்தி வேண்டுகிறார். இது வகையில் தயக்கம் கொண்ட ஹெலனுக்கு அவர் குறிப்பிட்டதாவது: “நீங்கள் மட்டும் ஷேக்ஸ்பியரின் வழக்கமான அறிவுமழுக்கத்தையும் சப்பை உணர்ச்சிப் பண்புகளையும் தள்ளிவிட்டு, அவரிடம் ஆங்காங்கே சிதறிக் காணப்படும் தெய்வீக நுண்பொற்பொடிகளைத் திரட்டி ஒளிர்வுபடுத்தல் வேண்டும். இதுவகையில் (ஷேக்ஸ்பியர் காலத்தைவிட) உங்கள் ஊழிக்குரிய உயர்விலும் அதன்சிறந்த மரபுரிமையிலும் நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். ஒரேயடி யான பேராவலின்றி, சிறுகச் சிறுக நற்பண்புகளை ஆண்டு பெருக்கும் தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் வேண்டும்..."
ய
"நீங்கள் முழுதும் தன் நிறைவுடைய மாதரே; காதலுணர்ச்சிக்கு நீங்கள் அடிமைப்பட்டவர்களல்லர். அதை நீங்கள் அடக்கி அடிமைப்படுத்தியிராவிட்டால், அதன் இழுப் பாற்றலால் நீங்கள் தன்செயலற்று அடித்துக் கொண்டுபோகப் பெற்றால், நீங்கள் அவ்வுணர்ச்சியில் மகிழ்வூட்ட முடியாது- தன் விருப்பால், கலைப்பண்பால், அதை இயக்க, முடிவதாலேயே உங்களால் அதன்மூலம் பிறருக்கு மகிழ்வூட்ட முடிகிறது."
66
'பெண்மையின் உயர் குறிக்கோள் ஒரு மனிதனா யிருப்பதே.பொதுப்பட,பெண்கள் இதனை மறைக்கப்பார்த்துத்
தாழ்வுறுகிறார்கள்.”
பெண்மைபற்றிய ஷாவின் இக் கருத்தைப் பலர் ஏற்கலாம். பலர் ஏற்கமுடியாதிருக்கலாம். ஆனால், அக்கருத்தில் பேரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை எவரும் ஒத்துக்கொள்ளா