பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

95

திருக்க முடியாது. உயிரின மரபில் ஆணுக்கு வேறுமரபு, பெண்ணுக்கு வேறுமரபு இல்லை. உடல் வேறுபாடு, செயல்வேறு பாடுகள் வளர்ச்சியில் வரும் வேறுபாடேயன்றி அடிப்படை வேறுபாடோ பண்புவேறுபாடோ அல்ல.கீழினங்கள் பலவற்றில் ஆண்பால் பெண்பால் ஒன்றுபட்டு மயங்குவதும், ஒன்று மற்றொன்றாய்த் திரிவதும், பால்வேறுபாடற்ற உயிர்கள் இருப்பதும் காண்கிறோம். ஆனால், பெண்மையின் நிறைவு ஆண்மை என்று கொள்ளாதவர், ஆண்மையின் நிறைவு பெண்மை என்றும் கொள்ளல்வடம். இருபாலின் பண்புகளும் கூடியதே மனித நிறைபண்பு என்பதுதான் எவரும் இயல்பாகவும் ஆராய்ச்சியாலும் எளிதில் காணக்கூடும் முடிபு என்னலாம். ஷாவின் கருத்து உலகில் பெரும் பாலார் பெண்மையைப் பற்றிக்கொள்ளும் உணர்ச்சி மரபுக் கருத்தைக் கண்டிக்கும் ஒரு வலியுறுத்துமுறை என்றே கொள்வதில் தவறு இருக்கமுடியாது.

குழந்தைகளைப்பற்றியும் இங்கே ஷா குறிப்பிடுகிறார். “குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதை நினைக்கவே எனக்கு மனம் புண்படுகிறது. ஆயினும் நேசம், அன்பு பாராட்டுவதால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளைக் குழந்தைகள் மீது காட்டுவது பயனற்ற வீண்செய்திகள் என்று நான் எண்ணு கிறேன்,” என்ற ஷாவின் சொற்கள் அவர்தம் இயற்கையன்பை ஒருபுறம் நமக்குக் காட்டி, அவர் தனிப்பட்ட குழந்தை உள்ளத்தினையும் நமக்கு நினைவூட்டுகிறது. குழந்தைகளை எண்ணியவுடன், “மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், மற்று அவர் -சொற்கேட்டல் இன்பம் செவிக்கு," என்றும், "குழல் இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச்சொற் கேளாதவர்” என்றும் குறிப்பிட்டுள்ள வள்ளுவரின் கருத்துக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அவர் கண்ட குழந்தைப் பருவ இன்பமும், குழந்தை இன்பமும் ஷாவின் உள்ளத்தைத் தீண்ட முடியாமற் போனமைக்காக நாம் வருந்தாதிருக்க முடிய வில்லை. வள்ளுவர் பண்பிற் பெரும்பகுதி யுடைய அவரை வறுமை எனும் 'பாவி', வள்ளுவர் கண்ட முழு இன்பம் காண முடியாமற் செய்திருக்கவேண்டும்.

-

சார்லட்டியின் காதலுணர்ச்சி அவருக்கு ஒரு பெருத்த வாழ்க்கை வினா ஆகிவிட்டது. “இது நிற்க, இந்த அயர்லாந்துக் கோடியஞ்செல்வியை நான் மணந்துகொள்வதா? எடி(எலெனின்