96
அப்பாத்துரையம் – 8
ஒரு தோழி)யைப் போலவே, அவரும் (சார்லட்டியும்) விடுதலை வாழ்விலேயே பற்றுடையவர். மணத்தில் பற்றுடைய வரல்லர். ஆயினும் அவர் இணங்குவார் என்று நான் எண்ணுகிறேன்; அதன்மூலம் எம் முயற்சியுமின்றியே நான் திங்களுக்குப் பன்னூறு பெற்றுவரவும் முடியும். எனக்கு அவர்மீதும், அவருக்கு என்மீதும் பற்று மிகுதி என்பதும் உண்மையே. ஆயினும் இவ் வகையில் தாங்கள் என்னை மன்னிக்கக்கூடுமா? கூடாதென்று தான் நான் அஞ்சுகிறேன்.”
-
ஷா பணத்துக்காக எச் செயலும் செய்யும் பண்புடைய வரல்லர் என்று கூறத் தேவையில்லை. இவ் வகையில் அவர் வ் நேர்மையையும் கண்டிப்பையும் மேலே கண்டோம். ஆனால், இங்கே இயற்கை நட்புணர்ச்சியின் முதிர்வான காதலால் அவர் குழப்பமடைகிறார். அவரைப் போல் அவர் காதலித்த மாதும் காதலை வெறுத்தவர். அத்துடன் அம்மாது பெரும் செல்வர். மணம் கூடாது; செல்வத்தைக் கலைஞர் நாடக்கூடாது என்ற இரண்டு தடைச்சுவர்களை அவர் இப்போதைய உணர்ச்சி தாண்டிக் குதிக்கிறது. காதலுக்கு அடிமையற்ற ஆடவர் பெண்டிர் உறவை அவர் மதித்தவர் என்பதை அவர் நாடகங்கள் பல காட்டு கின்றன. ஆணைக் கட்டுப்படுத்தாத பெண்ணின் காதலுறவு, பெண்ணைக் கட்டுப்படுத்தாத ஆடவன் காதலுறவு இதுவே ஷாவின் மணக்கோட்பாட்டுக் குறிக்கோள்; இது அவர் மண வாழ்வில் நிறைவேறியுள்ளது. ஆனால் மனைவியின் பொருளைக் கலைஞன் பயன்படுத்தலாமா? இவ் வகையில் ஷா தம் கருத்துக் களை இங்கே வெளியிடுகிறார்! "என் அன்னையின் வறுமையில் நான் பங்குகொண்டவன்; அதனை நான் மிகுதிப்படுத்தியவனும் கூட. உண்மையில் அவருக்குச் சுமையாக நான் வாழத் தயங்கிய தில்லை - மிக நீண்டநாள் வாழத் தயங்கியதில்லை. என் இலக்கிய வாழ்வை நான் ஐந்து நீண்ட புனைகதைகளுடன் தொடங்கினேன். அத்துடன் எத்தனையோ கட்டுரைகளையும் எழுதினேன்.ஆனால், எதையும் எவரும் வெளியிட முனையவில்லை. ஒன்ப தாண்டு களாக என் உழைப்புக்குக் கிடைத்த கூலி 15 வெள்ளிகள் தான்!”
‘வருவாயில்லாத காலத்தில் ஒரு தாயைச் சார்ந்து மகன் வாழலாமானால், தற்சார்புடன் வாழ வருவாய் வந்து விட்டபின் ஒரு மனைவியைச் சார்ந்து பின்னும் நல்வாழ்வு வாழ்வதில் என்ன