பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

97

தவறு?' என்று ஷாவின் வளர்ந்து விட்ட குழந்தையுள்ளம் கேட்டிருக்கவேண்டும். இவ் வாதம் தவறல்ல என்று நாட் கூறலாம். ஏனெனில், தாயிடமும் மனைவியிடமும் கலைஞர் பெறும் பணம் அவர்கள் உழைப்பின் கூலியும் அல்ல; அதன் மதிப்பும் அல்ல! ஆனால், அதேசமயம் அவை அதன் நேர்மை நடுநிலையைக் கெடுப்பவையும் அல்லவே! ஆகவே செல்வ மீட்டுவதில் தற்சார்பும் நேர்மையும் கெட வகை யேற்படும் இடத்தில் தான், ஷாவின் வணங்காமுடிப் பண்பு செயலாற்று கிறது என்று காணலாம்.

மூலம் இங்கிலாந்தில்

1896-இல் ஷாவுக்குக் காண்டி நிலைத்த கலைப்புகழ் கிடைத்திருந்தது. இந் நாடகம் ஜெர்மனி யில் பெர்லின்நகரில் வெற்றிகரமாகப் பல முறை ஆடப்பட்டு அவருக்கு வெளிநாட்டுப் புகழையும் பேரளவில் தந்திருந்தது. ஆனால், இவ்வாண்டிறுதியில் இயற்றப்பெற்ற “பேய்மகன் சீடன்” அமெரிக்காவில் பெருவெற்றியுடன் ஆடப்பெற்றது. அதனை நடித்த கழகத்தின் வருவாய் 25,000 பொன். ஷாவுக்கு இதில் நூற்றுக்குப் பத்து விழுக்காடு உரியதாயிற்று. இதழ் எழுத்தாண்மை முறையில் இத் தொகை அவர் ஆறாண்டு உழைப்புக்குச் சரியா யிருந்தது.இத்துடன் இதே ஆண்டில்தான் அவர் தம் நாடகங்களை வெளியிடத் தொடங்கியது. இதிலும் அவருக்கு வெற்றியும் வருவாயும் கிட்டியது. இனி, தம் வாழ்க்கை ஊதியத்துக்காக இதழ் எழுத்தாண்மையைச் சாரவேண்டிய தில்லை என்று கண்ட ஷா, “சனிக்கிழமை இதழ்"(saturday review) என்ற வார இதழில் தாம் கொண்டிருந்த கருத்தாண்மைப் பணியை நிறுத்திவிட்டார்.

1896-இலிருந்து ஷா இலண்டனில் இருந்தபோதெல்லாம் மாலை நேரங்களை ‘அடெல்ஃபி மேடை’(Adelphi terrace) சார்லட்டியின் என்ற அவர் இல்லத்தில் சென்று கழித்துவந்தார். அவர்களிடையே காதல் என்ற சொல்லுக்கும் அவ்வுணர்ச்சிக்கும் தேவையில்லாத அளவு ஒன்றுபட்ட நட்புணர்ச்சி இருந்துவந்தது. அவர்கள் தொடர்பு,

“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்"

என்னும் வள்ளுவர் நிறைநட்பின் பண்பினை எட்டியது என்ன லாம். 1898-ல் ஷாவுக்கு ஒரு பரு ஏற்பட்டு அறுவையால் அவர்