பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(100) || – –

அப்பாத்துரையம் - 8

சமயம் ஒப்பற்ற முதல்தர உலகக் கலைஞராகவும் விளங்கியவர் டால்ஸ்டாய். கலையில் அவர் அடைந்த வெற்றியை அவர் நிறையருளாண்மை இன்னும் ஒளிர்வுடைய தாக்கிற்று. ஆனால், இவற்றாலும் அருளாண்மைத் துறையில் ஆட்சி செலுத்தும் சி சமயமரபை அவரால் மாற்ற முடியவில்லை. கலை, அறிவு, அருள் ஆகிய முத்துறைகளிலும் நிறைவுடைய ஷா அரசியல், சமயம், வாழ்வியல் ஆகிய முத்துறையையும் தீண்டாது ஒதுக்கித் தள்ளினார். அறிவுபரப்பும் துறையிலும் உணர்ச்சியூட்டும் கலைத்துறையிலும் மட்டும் அவர் செயலாற்றினார். மக்களின் அடிப்படை அறிவு மாற்றம் ஏற்பட்டாலன்றி, அரசியல், சமயம், வாழ்வியல் ஆகிய மூன்று துறைகளிலும் சீர்திருத்தம் ஏற்படுவது முடியாத காரியம் என்பது அவர் கண்டுணர்ந்த உண்மை ஆகும்.

ஷா, டால்ஸ்டாய் ஆகியவர்களின் ஒற்றுமையில் ஒரு கூற்றினை அவர்களிடையே 1898-ல் ஏற்பட்ட சிறு தொடர்பு எடுத்துக்காட்டுகிறது.நாள்முறைக் காலக் குறிப்பு(Daily chornicle) என்னும் வெளியீட்டிதழில் டால்ஸ்டாயின் கலை என்பது யாது?' என்னும் நூலுக்கு ஷா மதிப்புரை வரைந்தார். “கலை என்பது ஒருமனிதன் தானுணர்ந்து கண்ட உணர்ச்சியினை மனமார மற்றொருவன் உள்ளத்திலும் ஏற்படுத்தும் வகையாகும்,” என்னும் டால்ஸ்டாயின் விளக்க முடிவு பற்றிய ஷாவின் கருத்துரை யாவது: "உண்மையில் பட்டாங்குரைத்த உரை இதுவே. கலை யுணர்வுடைய எவரும் இதைக்கேட்ட உடனே கலையாட்சி யுடைய ஒரு தலைவன் குரல் இது என உணர்வர்."

ஷாவின் நாடகங்களுள் "பிளாங்கோ பாஸ்நெட்டின் சாயம் வெளுத்தது(shewing up of balanco posnet)” என்ற ஒன்றை டால்ஸ்டாய் பெரிதும் விரும்பிப் பாராட்டியதாக அறிகிறோம். ஷா இதனை அறிந்து 1909-ல் அவருக்கு அதன் படி ஒன்றைப் பரிசனுப்பி ஒரு கடிதம் வரைந்தார்.

டால்ஸ்டாயைப்போலவே ஷா வாழ்க்கையில் ஒரு குறிக் கோளுடையவர். அக் குறிக்கோளடிப்படையில் டால்ஸ்டாயைப் போலவே அவர் ஒரு வாழ்க்கைத் தத்துவம் வகுத்தார். ஆனால், டால்ஸ்டாயின் வாழ்க்கைத் தத்துவம் தற்கால நாகரிக அடிப் படையை அலசிற்று. தற்கால அடிப்படையில் நின்ற அதை அலசவில்லை; ஷாவோ தற்கால அறிஞருள் ஒரு அறிஞராய்,