இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவுலக மேதை பெர்னாட்சா
101
தற்கால அறிவுத்துறையின் அறிவுப் படைக்கலங்களனைத் தையும் வழங்கினார். அத்துடன் அவ்வடிப்படை மீதே ஒரு முழு வாழ்க்கைத் தத்துவம் வகுத்து, அதனையே தம் கலைக் கண்ணாடி யாகக்கொண்டு உலகிற்கு அத் தத்துவத்தை விளக்கினார். இருபதாம் நூற்றாண்டில்தான் அவர் இம்முழு வாழ்க்கைத் தத்துவத்தை கலைமூலம் கையாண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் எழுதப்பட்ட நாடகங்கள் பெரும்பாலும் வாழ்வியலின் தனித்தனிக் கூறுகளை எடுத்துத் தாக்கும் வசைநாடகங்களாக மட்டுமிருந்தன. 'ஊழ் கண்ட மனிதன்’ ஒன்றிலேயே அவர் வாழ்க்கைத் தத்துவம் கருநிலையில் தோன்றுகிறது.அவரது நடுக்கால, பிற்கால நாடகங்கள் பலவற்றில் இவ்வாழ்க்கைத் தத்துவத்தை முழுமையாகவும் பகுதியாகவும்
காணலாம்.